மனிதர்களின் நம்பிக்கையை மோசடி உருக்குலைக்கிறது பண இழப்பு மன பாதிப்பு

மனிதர்களின் நம்பிக்கையை மோசடி உருக்குலைக்கிறது பண இழப்பு மன பாதிப்பு

2 mins read

வய­தான பெண்­மணி ஒருவர் அன்­புக்­கு­ரி­ய­வரை இழந்­ததை அறிந்த ஒரு மோச­டிக்­கா­ரர், அவ­ரி­டம் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வ­ராக நடித்­தார். அவரை நம்பி தமது வங்­கிக் கணக்­கி­லி­ருந்து $120,000 எடுத்துக்­கொ­டுத்­தார் அந்த மூதாட்டி. தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து, அந்த மாது காவல் துறையை அழைத்­த­போது காலம் கடந்­து­விட்­டது.

மூத்­தோர் தலை­முறை அலு­வ­லகத் தூதர் பேசி­ய­போது ​​தன்­னைச் சுற்­றி­யுள்­ள­வர்­களை நம்­புவது மிக­வும் கடி­ன­மாக இருப்­ப­தாக சொன்னார் மூதாட்டி.

மோச­டி­க­ளால் மனி­தர்­க­ளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நேற்று முன்தினம் நடந்த குழு விவா­தத்­தில் இச்­சம்­ப­வத்தை எடுத்­துக்­காட்­டா­கக் குறிப்­பிட்­டு பேசினார், ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு முகவை (ஏஐசி)யின் ஒருங்­கி­ணைந்த தக­வல் தொடர்பு, சந்­தைப்­படுத்­தல் பிரிவின் இயக்­கு­ந­ரான திரு­வாட்டி இவா லிம்,

"ஏற்­கெ­னவே தனி­மை­யி­லி­ருந்த அந்த மூதாட்டி, மேலும் ஒடுங்­கிப்­போனார். மோசடிகளால் நிதி இழப்புடன், முதி­யோ­ருக்கு பாத­க­மேற்­படுத்­தும் சமூக, மன­நல பாதிப்­பு­களும் ஏற்­ப­டு­கின்­றன," என்­றார் திரு­வாட்டி இவா.

மூத்­தோர் தலை­முறை அலு­வ­ல­கம், ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு முக­வை­யின் ஒரு பிரிவு. அதன் தூதர்­கள் முதி­யோ­ரின் தேவை­களை அறிந்து, நிவர்த்தி செய்­கி­றார்­கள்.

சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாடு, கண்­காட்சி மையத்­தில் புதன்­கி­ழமை நடை­பெற்ற மோச­டி­க­ளுக்கு எதி­ரான இரண்­டா­வது 'ஸ்கே­மி­னார்' கருத்­த­ரங்­கான 'ஆக்ட் அகைன்ஸ்ட் ஸ்கேம்சி'ல் திரு­வாட்டி இவா லிம் பேசி­னார்.

மோச­டி­க­ளின் தாக்­கம் நிதி இழப்­பு­க­ளுக்கு அப்­பாற்­பட்­டது. மக்­கள் மோச­டிக்கு ஆளா­கும்­போது, ​​​அவர்­கள் தங்­க­ளைச் சுற்­றி­யுள்­ள­வர்­கள் மீது நம்­பிக்­கையை இழக்­கி­றார்­கள் என்­றார் கருத்­த­ரங்­கின் மற்­றொரு பேச்­சா­ள­ரான உள்­துறை அமைச்­சின் தலைமை உள­வி­ய­லா­ளர் டாக்­டர் மஜீத் காதர்.

"மோச­டிக்கு ஆளா­கும்­போது சில நேரங்­களில் தூங்­கு­வது கடி­னம். மிக­வும் கவ­லை­யாக இருக்­கும். சிலர் தற்­கொ­லை­கூட செய்­து­கொண்­டி­ருக்கிறார்­கள். மோசடி சுய துன்­பு­றுத்­த­லுக்கு இட்­டுச் செல்­வ­தை­யும் காண­லாம்.மோச­டி­யின் ஒரு தாக்­கம் உடல் ரீ்தி யா­னது. மற்­றது கவலை, மனச்­சோர்வு, பதற்­றம், மன அழுத்­தம் என உளவியல் ரீதி­யா­னது," என்று அவர் சுட்டினார்.

கருத்­த­ரங்­கில் பேசிய வெளி­நாட்டு ஊழி­யர் மையத்­தின் தொழிற்­சங்­கங்­கள், திட்­டங்­கள் பிரி­வின் தலை­வ­ரான திரு ஆர்.வி. சதீஷ் நாயுடு, வெளி­நாட்டு ஊழி­யர்­களும் மோச­டி­க­ளுக்கு ஆளா­வதைக் குறிப்­பிட்­டார்.

அதி­கா­ரி­க­ளுக்குப் பயப்­படும் அவர்­கள் மன­நிலை மோச­டி­யில் விழ வழி­வகுக்­கிறது என்­று அவர் கூறினார்.

"போலி அடை­யாள அட்­டை­யைக் காட்டி அதி­கா­ரி­போல் நடிக்­கும்­போது வெளி­நாட்டு ஊழி­யர் தாம் ஏதோ தவறி­ழைத்து விட்­ட­தாக கவ­லைப்­ப­டு­கிறார். திருப்பி அனுப்­பப்­பட அவர்­கள் விரும்­பு­வ­தில்லை. சட்ட விதி­முறை­களைப் பின்­பற்­றும் சிங்­கப்­பூ­ருக்கு வேலைக்கு வந்த அவர்­கள், விதி­முறை­க­ளைப் பின்­பற்றி நடக்க நினைக்­கி­றார்­கள்," என்றார் அவர்.

முதி­ய­வர்­கள் மோச­டி­க­ளுக்கு ஆளா­வ­தைத் தடுக்கும் ஒரு வழியாக, அவர்­களது மின்­னி­லக்­கத் திறன்­களை வளர்க்க, எஸ்ஜி மின்­னி­லக்க அலுவல­க மின்­னி­லக்­கத் தூதர்­கள் உதவி வருவ தாக தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்பாட்டு ஆணை­யத்­தின் கட்­ட­மைப்­புத் திட்ட அலு­வ­ல­கத்­தின் துணை இயக்கு­நர் திரு டான் ஃபோங் சிங் கூறினார்.