உடற்குறைபாட்டுக்கு ஆதரவு வழங்கும் திட்டம்

உடற்குறைபாட்டுக்கு ஆதரவு வழங்கும் திட்டம்

2 mins read
dc38c27c-0374-4bee-ab9c-e9b8f400a9ed
-

நீண்டகால பராமரிப்புச் செலவினம் குறித்த கவலையா?

2020ல் தொடங்கப்பட்ட கேர்ஷீல்ட் லைஃப், தீவிர உடல் குறைபாடுகளால் ஏற்படும் செலவினத்தைக் குறைக்க மாதாந்திர வழங்குதொகைகளை அளிக்கும் ஒரு தேசிய உடல் குறைபாடு காப்பீடு திட்டமாகும்.

கேர்­ஷீல்ட் லைஃப்பால் பய­ன­டை­வோர் யார்? எனது பெற்­றோ­ரின் சார்­பில் நான் கேர்­ஷீல்ட் லைஃப் திட்­டத்­தில் பதிவு செய்து கொள்­ள­லாமா?

1980இல் அல்­லது அதற்கு பின்­னர் பிறந்த சிங்­கப்­பூ­ரர்­களும் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­களும் 2020ஆம் ஆண்டு அக்­டோ­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்தோ, அல்­லது 30 வய­தா­ன­தன் பின்னோ, (எது பின்னர் வருகிறதோ) கேர்­ஷீல்ட் லைஃப்பில் தாமா­கவே இணைக்­கப்­ப­டு­வர்.

எல்­டர்­ஷீல்ட் 400 திட்­டத்­தில் இருந்­து­கொண்டு, தீவிர உடற்­குறை இல்­லாத 1970க்கும் 1979க்கும் இடையே பிறந்­தோர், 2021ஆம் ஆண்டு டிசம்­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்து கேர்­ஷீல்ட் லைஃப்பில் தாமா­கவே இணைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கேர்­ஷீல்ட் லைஃப்பில் தாமா­கவே இணைக்­கப்­ப­டா­தோர் அதில் பதிவு செய்­து­கொள்­ள­லாம். 2023ஆம் ஆண்டு டிசம்­பர் 31ஆம் தேதிக்­குள் பதிவு செய்­வோர், அடுத்த பத்­தாண்­டு­க­ளுக்­கான காப்­பு­றுதி சந்­தாக்­க­ளைச் செலுத்­து­வ­தற்கு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து $4,000 வரை பெற­லாம்.

கேர்­ஷீல்ட் லைஃப்பில் பதிவு செய்­து­கொள்ள உங்­க­ளது பெற்­றோரை நீங்­கள் ஊக்­கு­விக்­க­லாம், வழி­காட்­ட­லாம்.

உங்­க­ளது மெடி­சேவ்வை பயன்­ப­டுத்­தியோ, அவர்­க­ளது மெடி­சேவ் கணக்­கில் பணம் நிரப்­பியோ, அவர்­க­ளது காப்­பு­றுதி சந்தா தொகையை செலுத்­து­வ­தற்கு உத­வ­லாம்.

கேர்­ஷீல்ட் லைஃப்புக்­கான காப்­பு­றுதி சந்தா தொகை எவ்­வ­ளவு? இத்­தொகை வரும் ஆண்­டு­களில் உய­ருமா?

வயது, பாலி­னம், எல்­டர்­ஷீல்ட் காப்­பு­றுதி கொண்­டுள்­ள­னரா, கேர்­ஷீல்ட் திட்­டத்­தில் இணைந்­து­கொண்ட ஆண்டு, என பல கார­ணி­க­ளின் அடிப்­ப­டை­யில் கேர்­ஷீல்ட் லைஃப்புக்­கான காப்­பு­றுதி சந்தா தொகை நிர்­ண­யிக்­கப்­ப­டு­கின்­றது.

ஆண்­டு­தோ­றும் செலுத்­த­வேண்­டிய காப்­பு­றுதி சந்தா வய­தாக ஆக உய­ரும். அர­சாங்­கம் செய்­யும் வழக்­க­மான மாற்­றங்­க­ளைப் பொறுத்­தும் அது உய­ரக்­கூ­டும்.

www.careshieldlife.gov.sg எனும் தளத்­தில் உள்ள 'கேர்­ஷீல்ட் லைஃப் பிரீ­மி­யம் செக்­கர்' மின்­சே­வை­யைப் பயன்­ப­டுத்தி உங்­க­ளது காப்­பு­றுதி சந்தா எவ்­வ­ளவு என்­பதை சரி­பார்க்­க­லாம். இப்­போதிலி­ருந்து 2025 வரை, காப்­பு­றுதி சந்­தாக்­கள் (பொருள், சேவை வரி இல்­லா­மல்) 67 வய­துக்கு கீழுள்­ளோ­ருக்கு ஆண்­டு­தோ­றும் 2 விழுக்­காடு உய­ரும்.

2025க்குப் பின், காப்­பு­றுதி சந்­தாக்­க­ளின் உயர்வு தனி­யார் கேர்­ஷீல்ட் லைஃப் மன்­றத்­தால் குறிப்­பிட்ட ஒரு கட்­ட­மைப்­பின்­படி பரிந்­து­ரைக்­கப்­படும்.