கடும் எச்சரிக்கை விடுத்ததே சரியான தீர்வாகும்

2 mins read
7f7b5660-844c-4d78-a9f5-113d134026cb
-

முக்­கி­ய சாட்­சி­கள், போது­மான ஆதா­ரங்­கள் என இரண்­டுமே இல்­லாத பட்­சத்­தில் கெப்­பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் (ஓ&எம்) நிறு­வ­னத்­தின் முன்­னாள் மூத்த நிர்­வா­கி­கள் அறு­வர் மீதும் ஊழல் தொடர்­பில் வழக்கு தொடுப்­ப­தற்­குப் பதி­லாக அவர்­களுக்­குக் கடு­மை­யான எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது என்று பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா தெரிவித்தார்.

இருப்­பி­னும் வலு­வான, புதிய ஆதா­ரங்­கள் கிடைத்­தால் அர­சாங்­கத் தரப்பு வழக்­க­றி­ஞர் இம்­மு­டிவை மறு­ம­திப்­பீடு செய்­ய­லாம், அவ்­வாறு செய்ய முடி­யும் என்­றார் அவர். இவ்­வி­வ­கா­ரம் தொடர்­பில் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கேட்­கப்­பட்ட 17 கேள்­வி­க­ளுக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

"சுருக்­க­மா­கச் சொன்­னால், ஆவண வடி­விலோ சாட்­சி­கள் மூலமோ போது­மான ஆதா­ரங்­கள் இல்லை. இருந்­தால்­தான் சந்­தே­கத்­திற்கு இட­மின்றி ஒரு­வ­ருக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டைக் கொண்­டு­வர முடி­யும்," என்­றார்.

லஞ்ச ஊழல் புல­னாய்­வுப் பிரிவு அதி­கா­ரி­கள் கடந்த மாதம் வெளி­யிட்ட ஊடக அறிக்­கை­யைச் சுட்­டிய அவர், அதி­கா­ரி­கள் தங்­க­ளால் இயன்ற அள­வுக்கு ஆதா­ரம் திரட்ட முயன்­ற­தா­கக் குறிப்­பிட்­டார். இதற்­காக அனைத்­து­ல­கப் பங்­கா­ளி­க­ளு­டன் அவர்­கள் இணைந்து செயல்­பட்­ட­னர்.

இருப்­பி­னும் முக்­கிய சாட்­சி­கள் பல­ரும் சிங்­கப்­பூ­ரில் இல்லை என்­றும் அவர்­க­ளின் ஒத்­து­ழைப்பை உறு­திப்­ப­டுத்தி சிங்­கப்­பூ­ரில் சாட்­சி­யம் அளிக்க வைக்­கச் சிர­ம­மாக இருந்­தது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சாட்சி ஒரு­வர் வலு­வான ஆதா­ரம் அளிப்­ப­வ­ராக இருந்­தும் அவர் சிங்­கப்­பூர் வந்து சாட்­சி­யம் அளிக்­கத் தயா­ராக இல்லை என்­றார் திரு­வாட்டி இந்­தி­ராணி.

இதில் சம்­பந்­தப்­பட்ட அறு­வரும் பிரே­சி­லில் தங்­கள் நிறு­வனச் செயல்­பா­டு­கள் தொடர்­பில் வெளி­நாட்டு ஆலோ­ச­கர்­க­ளுக்­குக் கையூட்டு தரு­வ­தற்கு கூட்­டுச் சதித்­திட்­டம் தீட்­டி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பிரே­சி­லுக்­குச் சொந்­த­மான 'பெட்­ரோ­பி­ராஸ்' நிறு­வ­னத்­துக்­குக் கிட்­டத்­தட்ட $73 மில்­லியனை லஞ்­ச­மா­கத் தந்து அதற்கு ஈடா­கத் தங்­கள் நிறு­வ­னத்­துக்­குச் சில வர்த்­தக ஒப்­பந்­தங்­க­ளைப் பெற அவர்­கள் செயல்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.