புதுடெல்லி: இந்தியாவின் '5ஜி' தொழில்நுட்பம் மீது 10 நாடு களுக்கு ஆா்வம் இருப்பதாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட '4ஜி', '5ஜி' தொழில்நுட்பங்களை ஒன்பது முதல் 10 நாடுகள் முயற்சித்துத் பார்க்க விரும்புவதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சருமான அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் 'தி எக்கனாமிக் டைம்ஸ்' நாளிதழ் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற உலக வணிக மாநாட்டில் பேசிய அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபா் 1ஆம் தேதி இந்தியாவில் '5ஜி' சேவைகள் அறிமுகமாயின. '5ஜி' சேவை அறிமுகம் செய்யப்பட்ட 100 நாள்களுக்குள் நாட்டின் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் அச்சேவை தொடங்கப்பட்டது.
இதன் வேகத்தை உலக அளவில் தொழில்துறை தலைவர்கள் பாராட்டியுள்ளனா்.
உலகில் வேறு இடங்களைவிட இந்தியாவில் மிக வேகமாக 5ஜி சேவைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதாக பல அனைத்துலக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகின் முக்கிய தொலைத் தொடர்பு தொழில்நுட்ப ஏற்று மதியாளராக இந்தியா உருவாகும். தற்போது உள்நாட்டில் உரு வாக்கப்பட்டுட்ள்ள '4ஜி', '5ஜி' தொழில்நுட்பங்கள் தயாராக உள்ளன.
தொடக்கத்தில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் அழைப்புகள் மூலம் அந்தத் தொழில்நுட்பங்கள் பரிசோதிக்கப்பட்டன. பின்னா் 50 லட்சம், ஒரு கோடி அழைப்புகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனைகள் அற்புதமாக வெற்றிபெற்றுள்ள நிலையில் இந்தியாவின் '4ஜி', '5ஜி' தொழில்நுட்பங்களை ஒன்பது முதல் 10 நாடுகள் முயற்சித்துப் பார்க்க விரும்புகின்றன என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

