சிட்னியில் ஆஸ்திரேலிய பிரதமர், ஜெய்சங்கர் சந்திப்பு

சிட்னியில் ஆஸ்திரேலிய பிரதமர், ஜெய்சங்கர் சந்திப்பு

1 mins read

புது­டெல்லி: சிட்­னி­யில் ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­தமா் ஆன்­டனி அல்­ப­னி­சும் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­க­ரும் சந்­தித்­துப் பேசி­யுள்­ள­னர். அனைத்­துலக சூழல் சவால்­மி­குந்­த­தாக உள்ள நிலை­யில் ஒரு­மித்த கருத்­து­டைய நாடு­கள் ஒன்­றி­ணைந்து செயல்­பட வேண்­டும் என்று வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்கா் அப்­போது வலி­யு­றுத்­தி­னார்.

ஃபிஜி பய­ணத்தை முடித்­துக் கொண்டு ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அரசு முறைப் பய­ண­மாக அமைச்­சர் ஜெய்­சங்கா் சிட்னி சென்­றுள்­ளார். அங்கு அந்­நாட்­டுப் பிர­தமா் ஆன்­டனி அல்­ப­னிசை சனிக்­ கிழமை­ சந்­தித்­துப் பேசி­னார்.

இரு­வ­ரும் இரு­த­ரப்பு நல்­லுறவு, பொரு­ளி­யல் வாய்ப்­பு­கள், மக்­க­ளுக்கு இடை­யி­லா­ன தொடர்பு, கிரிக்­கெட் உள்­ளிட்ட பல்­வேறு விவ­கா­ரங்­கள் குறித்து பேசி­னர்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெய்­சங்கா் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'பிர­தமா் நரேந்­திர மோடி­யின் தனிப்­பட்­ட வாழ்த்­துச் செய்­தியை பிர­தமா் அல்பனிசிடம் பகிர்ந்துகொண்டேன். இரு தரப்பு நல்­லு­றவை மேலும் வலுப்­ப­டுத்­து வது தொடா்பாகவும் விவா­திக்­கப்­பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.