'எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக கூட்டணி அமைத்தால் பாஜகவை 100 இடங்களுக்குள் வீழ்த்தலாம்'

'எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக கூட்டணி அமைத்தால் பாஜகவை 100 இடங்களுக்குள் வீழ்த்தலாம்'

2 mins read

புது­டெல்லி: "நான் சொல்­வ­தைக் கேட்டு எதிர்க்­கட்­சி­கள் கூட்­ட­ணியை காங்­கி­ரஸ் உரு­வாக்­கி­னால் அடுத்த தேர்­த­லில் பாஜ­கவை 100 இடங்­க­ளுக்­குள் சுருட்டி விட­லாம்," என்று நிதிஷ்­கு­மார் உறு­தி­யு­டன் தெரிவித்து உள்ளார்.

பீகார் தலை­ந­கர் பாட்­னா­வில் இந்­திய கம்­யூ­னிஸ்ட் (மார்­க்சிஸ்ட் லெனி­னிஸ்டு) ஏற்­பாடு செய்த விழா­வில் பீகார் மாநில முதல்­ வ­ரும் ஐக்­கிய ஜனதா தளக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான நிதிஷ்­கு­மார், காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான சல்­மான் குர்­ஷித், துணை முதல்­வ­ரும் ராஷ்­டி­ரிய ஜன­தா­த­ளத் தலை­வ­ரு­மான தேஜஷ்வி யாதவ், இந்­திய கம்­யூ­னிஸ்ட் (மார்க்­சிஸ்ட் லெனி­னிஸ்டு) பொதுச்­செ­ய­லா­ளர் திபாங்­கர் ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.

இதில் பீகார் முதல்­வ­ரும் ஐக்­கிய ஜன­தா­த­ளம் கட்­சி­யின் தலை­வ­ரு­மான நிதிஷ்­கு­மார் பேசி­னார்.

"நான் எனது காங்­கி­ரஸ் கட்சி நண்­பர்­க­ளுக்கு சொல்­லிக்­கொள்ள விரும்­பும் விஷ­யம் ஒன்று உண்டு.

"ராகுல் காந்தி மேற்­கொண்ட இந்­திய ஒற்­றுமை யாத்­திரை நல்­ல­தொரு வெற்றி பெற்­றது. அத்­து­டன் நிறுத்தி விடக்­கூ­டாது.

"பழைய பெரு­மை­களில் காங்­கி­ரஸ் குளிர்­காய்ந்து கொண்டு இருந்துவிடக்­கூ­டாது.

"ராகுல் காந்­தி­யின் இந்­திய ஒற்­றுமை யாத்­தி­ரை­யில் பெற்ற வேகத்தைப் பயன்­ப­டுத்த வேண்­டும். பா.ஜ.க.வுக்கு எதி­ரான கூட்­டணியை உரு­வாக்க வேண்­டும்.

"பீகா­ரில் பா.ஜ.க. கூட்­ட­ணி­யில் இருந்து கடந்த ஆண்டு நாங்­கள் வெளி­யே­றி­ய­தைத் தொடர்ந்து, பா.ஜ.க. தனது பாதச்­சு­வ­டு­களை இந்த மாநி­லத்­தில் விரி­வு­ப­டுத்­தும் முயற்­சிக்கு திரை விழுந்துவிட்­டது.

"நாம் இதேபோன்று தேசிய அள­வில் ஒன்­றைச் சாதித்­தாக வேண்­டும். எனக்­கென எந்­த­வி­த­மான எதிர்­கால ஆசை­களும் இல்லை.

"எனது அறி­வு­ரை­யைக் கேட்­டால், அது நாட்­டுக்­கும் நன்மை பயக்­கும். நாட்­டுக்கு மட்­டு­மல்ல, பா.ஜ.க.வின் மேலா­திக்க வெப்­பத்­தைச் சந்­தித்து வரு­கிற கட்­சி­க­ளுக்­கும் நல்­லது.

"எதிர்க்­கட்­சி­கள் கூட்­ட­ணியை காங்­கி­ரஸ் கட்சி உரு­வாக்கி அறி­விக்க வேண்­டும்.

"தற்­போது மக்­க­ள­வை­யில் 300க்கும் மேற்­பட்ட இடங்­க­ளைப் பெற்று தனிப்­பெ­ரும்­பான்மை பெற்­றுள்ள பா.ஜ.க.வை அடுத்த தேர்­த­லில் 100 இடங்­க­ளுக்­குள் சுருட்­டி­விட முடி­யும்.

"நாட்டை இவர்­க­ளி­டம் இருந்து (பா.ஜ.க.) விடு­விக்க மக்­க­ள­வைத் தேர்­தல் ஒரு நல்ல வாய்ப்பு.

"தேசப்­பி­ரி­வி­னை­யால் ரத்­தம் தோய்ந்த மரபு இருந்­தா­லும் கூட இந்­துக்­களும், முஸ்­லிம்­களும் அமை­தி­யாக வாழ்ந்த நாடு இது. தற்­போது மத­வாத பதற்­றங்­கள் அதி­க­ரித்து வரு­வது கவலை அளிக்­கிறது.

"நாட்­டின் சுதந்­தி­ரத்­தில் பங்­க­ளிப்பு இல்­லா­த­வர்­கள் இப்­போது வர­லாற்றை மாற்றி எழுத முயற்­சிக்­கி­றார்­கள்.

"அர­சுக்கு எதி­ராக குரல் எழுப்­பு­கி­ற­வர்­களை ஒடுக்­கு­வ­தற்கு புல­னாய்வு அமைப்­பு­களைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள்," என்று நிதிஷ்­கு­மார் வலி­யு­றுத்­தி­னார்.