மூத்­தோ­ர் நலனில் அக்கறை அன்புடன், இளையர்கள்

மூத்­தோ­ர் நலனில் அக்கறை அன்புடன், இளையர்கள்

2 mins read
f7216425-b314-4c7b-a690-f4f8e60dab8d
-
multi-img1 of 2

பரா­ம­ரிக்­கப்­ப­டாத வீடு, அழுக்­குப் படிந்த சுவர்­கள், எங்­கும் குப்பை, எதி­லும் கரப்­பான் தொல்லை. இப்­ப­டிப்­பட்ட ஒரு வீட்­டைக் கடந்து செல்­லக்­கூட நாம் தயங்கு­வோம். ஆனால், இளை­யர்­கள் சிலர் மூத்­தோ­ருக்கு உத­வும் ஒரே குறிக்­கோ­ளு­டன் இத்­த­கைய வீடு­க­ளுக்­குள் தயங்­கா­மல் காலடி எடுத்து வைத்து வீட்­டுப் பரா­மரிப்புக்­குக் கைகொ­டுத்து வரு­கின்றனர்.

'புரோ­ஜெக்ட் அமிகா' எனும் தொண்­டூ­ழிய அமைப்பை சுஜேஷ் வீர­மணி, 17, தன் பள்ளி நண்­பர் ஜானத்­தன் இயோ­வு­டன் இணைந்து நிறு­வி­னார்.

யூஹுவா வட்­டா­ரத்­தில் தன் பெற்­றோ­ரு­ட­னும் பாட்­டி­யு­ட­னும் வசித்­து­வ­ரும் அவர், அவ்­வப்­போது பாட்­டி­யின் மூத்த தோழிக்கு உணவு கொடுப்­ப­தற்­காக அவ­ரின் வீடு தேடிச் செல்வ­துண்டு. மூதாட்டி தனியே வாழ்ந்து­வந்த அந்த ஓரறை வீடு இருந்த நிலை­மை­யைப் பார்த்­தார் சுஜேஷ். அந்த முதி­ய­வர் நட­மாடச் சிர­மப்­ப­டு­வ­தால் வீட்­டைப் பரா­ம­ரிக்க முடி­யா­மல் போனதை அவர் அறிந்­து­கொண்­டார்.

அதில் தொடங்­கிய சுஜே­ஷின் தொண்­டூ­ழிய எண்­ணம், தற்­போது 250க்கும் மேற்­பட்ட மாண­வத் தொண்­டூ­ழி­யர்­களை ஈர்த்­துள்­ளது.

மாதத்­தில் நான்கு முறை­யா­வது மூத்­தோ­ரின் வீடு­க­ளுக்கு நேரில் சென்று அங்கு துப்­பு­ரவு, பரா­ம­ரிப்­புப் பணி­களில் ஈடு­ப­டு­வது அமைப்­பின் சேவை­களில் அடங்­கும். 2021ஆம் ஆண்டு அமைப்பு தொடங்­கப்­பட்­டது முதல் இக்­குழு ஏறக்­கு­றைய 35 வீடு­களைப் பரா­ம­ரித்து வந்­துள்­ளது. மூத்­தோ­ரை சுற்­றுலாப் பய­ணங்­கள் அழைத்­துச் செல்­வது முத­லிய நிகழ்­வு­க­ளுக்­கும் அமைப்பு ஏற்­பாடு செய்­துள்­ளது.

மூத்­தோர் தங்­க­ளின் வயது, உடல்­நிலை கார­ண­மாக வீடு­களைச் சிறந்த முறை­யில் பரா­ம­ரிக்க முடி­யா­மல் போகிறது.

எனவே, மூத்­தோர் வீடு­களுக்­குப் புது பொலி­வூட்டி அதன்­வழி அந்த முதி­ய­வர்­களுக்கு நம்­பிக்கை ஊட்டி வரும் சுஜேஷ், ஜானத்­தன் இரு­வ­ரும் பல்­வேறு பின்­னணி­க­ளு­டைய இளை­யர்­க­ளைத் தங்­க­ளின் அமைப்­பில் இணைப்­ப­தற்காக உயர்­நி­லைப் பள்­ளி­கள், உயர்­கல்வி நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றில் பயி­லும் மாண­வர்­க­ளு­டன் கைகோத்­துள்­ள­னர். யூஹுவா சமூக மன்­றம், 'டச்' சமூக சேவை அமைப்பு ஆகி­ய­வற்­று­டன் இணைந்து ஆத­ரவு திரட்­ட­வும் முயன்று வரு­கின்­ற­னர்.

பள்­ளிக் காலத்­தில் குறிப்­பிட்ட சில மணி நேரத்­துக்­குத் தொண்­டூ­ழி­யம் செய்­தாக வேண்­டும் என்ற எண்­ணம் மாறி, பிறர் நல­னில் அக்­கறை செலுத்­து­வ­தைத் தங்­க­ளின் கட­மை­யாக இளை­யர்­கள் கருத­வேண்­டும் என்­பதே சுஜே­ஷின் வேண்­டுகோள்.