தன்னை நல்­வ­ழிப்­ப­டுத்­திய அமைப்­பின் ஓர் அங்கமானார்

தன்னை நல்­வ­ழிப்­ப­டுத்­திய அமைப்­பின் ஓர் அங்கமானார்

2 mins read

குப்­பைத்­தொட்­டி­க­ளை­யும் வாளி­களை­யும் அடித்­து, ஓசை எழுப்பி இசை ஆர்­வத்தை இளை­யர்­கள் மத்­தி­யில் தூண்­டும் ஜெய், தன் வாழ்க்­கை­யின் ஒரு கட்­டத்­தில் பிடி­மா­ன­மில்­லா­மல் வாழ்ந்­தார்.

தந்­தை­யின் பரா­ம­ரிப்­பில் இருந்த அல்ட்­ரிச் ஜெய் கிஷான், 10 வய­தில் அந்­தத் தந்­தையை இழந்­தார். சிக­ரெட்­டி­லும் மது­விலும் அவர் ஆறு­தல் காணத் தொடங்­கி­னார். அவரை நல்­வழிப்­ப­டுத்த எண்­ணிய ஜெய்யின் தாயார், அவ­ரைச் சிறு­வர் இல்­லத்­தில் சேர்த்­தார்.

ஆனால் தான் மீண்­டும் சிறு­வர் இல்­லத்­தில் பணி­யாற்­று­வார் என்றோ, அப்­ப­ணி­யில் இந்­நாள் வரை நீடிப்­பார் என்றோ ஜெய் அப்­போது நினைத்­துக்­கூ­டப் பார்க்­க­வில்லை. அந்­தச் சிறு­வர் இல்­லப் பரா­ம­ரிப்­பில் ஜெய்யின் பதின்ம காலம் கழிந்­தது.

சிறு­வர் இல்­லத்­தி­லி­ருந்து 2010ல் வெளி­யே­றி­ய­போது ஜெய் குதூ­க­லித்­தார். சுதந்­தி­ரம் கிடைத்­து­விட்­ட­தாக அவர் எண்­ணி­னார். தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழ­கத்­தில் மின்­னி­லக்க ஒலி, ஒளித் தயா­ரிப்­புத் துறை­யில் பயின்ற காலத்­தில் பகு­தி­நேர வேலை­கள் செய்­தும் வந்­தார்.

இருப்­பி­னும், தாள வாத்­தி­யங்­க­ளைக் கற்­றுக்­கொண்டு தன் இசைத் திற­மையை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளும் வாய்ப்பு, அந்­தச் சிறு­வர் இல்­லத்­தில்­தான் அமைந்­த­தாக அவர் கூறி­னார்.

"அது­வரை உதவி தேவைப்­படும் ஓர் இளை­ய­ரா­கத்­தான் சுற்றி இருந்­த­வர்கள் என்­னைப் பார்த்­தார்­கள். நம்­பிக்­கைக்­கு­ரிய ஒரு நப­ராக என்னை அவர்­கள் கரு­த­வில்லை. சிறு­வர் இல்­லப் பரா­ம­ரிப்­பா­ளர்­கள்­தான் என்னை முதன்­மு­றை­யாக மரி­யா­தை­யு­டன் நடத்­தி­னார்­கள்," என்­றார் 29 வயது ஜெய். தான் பய­ன­டைந்த அதே வகை­யில் பிற இளை­யர்­களுக்­கும் கைகொ­டுக்­க­வேண்டும் என்ற ஆர்­வம் அவ­ருக்கு ஏற்­பட்­டது.

தற்­போது இளை­யர்­க­ளு­டன் பணி­பு­ரிந்­து­வ­ரும் ஜெய், 'யூத்­ரீச்' பிரி­வில் இயங்கி வரு­கி­றார். பாதிப்­ப­டை­யக்­கூ­டிய இளை­ய­ரைக் கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு உத­வு­வது ஜெய்யின் வேலைப் பொறுப்­பு­களில் ஒன்­றா­கும். ஜெய் இவர்­க­ளு­டன் இயல்­பாக உரை­யா­டிச் சிக்­கல்­களை அறிந்­து­கொள்ள முற்­ப­டு­கி­றார்.

தனக்கு இசை தந்த பிடி­மா­னம் பிற இளை­யர்­க­ளை­யும் வசப்­ப­டுத்­தும் என்ற நம்­பிக்­கை­யில், தாள வாத்­தி­யங்­கள் வாசிப்­ப­தைச் சில வகுப்­பு­களில் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார் ஜெய். குப்­பைத்­தொட்டி, வாளி எனக் கையில் கிடைப்­ப­தைப் பயன்­படுத்தி இசை உரு­வாக்­கி­யது இளை­யர்­க­ளி­டையே நல்­ல­தொரு மாற்­றத்­தைக் கொண்டு வந்­த­தா­க­வும் அவர் நினை­வு­கூர்ந்தார்.

"இப்­ப­ணி­யில், ஒவ்­வொரு நாளும் வெவ்­வேறு படிப்­பி­னை­கள் உண்டு; சலிப்பு தட்­டவே தட்­டாது," என்று கூறிய ஜெய், தன் மன­துக்கு நெருக்­க­மான இந்­தப் பணியை நிறுத்­து­வ­தாக இல்லை என்­றார்.