கலிஃபோர்னியாவில் புயல்; குறைந்தது இருவர் மரணம்

கலிஃபோர்னியாவில் புயல்; குறைந்தது இருவர் மரணம்

2 mins read
ef07b190-c4d0-487a-8b93-5ecbc0795d72
-

லாஸ் ஏஞ்­ச­லிஸ்: அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னியா

மாநி­லத்தை நேற்று முன்­தி­னம் மேலும் ஒரு புயல் தாக்­கி­யது.

இத­னால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­யி­லி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வெளி­யே­றும் நிலை ஏற்­பட்­டது.

புயல் கார­ண­மாக அணைக்­கரை ஒன்று இடிந்து விழுந்­த­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

புயல் பல சேதங்­களை ஏற்­

ப­டுத்­தி­ய­து­டன் குறைந்­தது இரு­

வ­ரின் உயி­ரைப் பறித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

"எது நடக்­கக்­கூ­டாது என்று அஞ்­சி­னோமோ அது நடந்­து­விட்­டது. பஜரோ ஆற்­றில் நீரின் அளவு ஆற்­றின் கொள்­ள­ள­வை­யும் கடந்து வெள்­ளம் கரை­பு­ரண்­டோ­டி­யது," என்று மொன்ட்­டேரே கவுன்ட்­டி­யின் மேற்­பார்­வை­யா­ளர் திரு லுயிஸ் அலேஜோ கூறி­னார்.

வெள்­ளத்­தில் பல வாக­னங்­கள் சிக்­கி­ய­தில் அவற்­றில் மாட்­டிக்­கொண்டு தவித்­தோரை மீட்­புப் பணி­யா­ளர்­கள் காப்­பாற்­றி­ய­தைக் காட்­டும் படங்­கள் டுவிட்­ட­ரில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டன.

மிக­வும் கடு­மை­யா­க பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் குறைந்­தது ஒரு சாலை வெள்­ளத்­தில் முழு­மை­யாக மூழ்­கி­யது.

கலி­ஃபோர்­னி­யா­வில் உள்ள பல நக­ரங்­களில், குறிப்­பாக வடக்­குப் பகு­தி­யில் உள்ள நக­ரங்­களில் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­று­மாறு அங்­குள்ள மக்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. கலி­ஃபோர்­னி­யா­வில் இம்­முறை வழக்­கத்­துக்கு மாறாக புயல் மிக­வும் கடு­மை­யாக இருப்­ப­தா­க­வும் தொடர்ந்து பல வாரங்­க­ளாக அம்­மா­நி­லத்தை உலுக்கி வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­படுகிறது.

கலி­ஃபோர்­னி­யா­வில் அவ­ச­ர­நி­லையை அறி­விக்க அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று ஒப்­ப­தல் அளித்­தார்.

இதன்­மூ­லம் அம்­மா­நி­லத்­துக்­குத் தேவை­யான உதவி விரை­வா­கச் சென்­ற­டை­யும்.

இதற்­கி­டையே, தென்­ன­மெரிக்க நாடான பெருவை சுழற்­காற்று புரட்டி எடுத்­துள்­ளது. இதில் குறைந்­தது ஆறு பேர் மாண்­டு­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

நூற்­றுக்­க­ணக்­கான வீடு­கள் சேதம் அடைந்­து­விட்­ட­தா­க­வும் அந்­நாட்டு மக்­க­ளுக்­குப் பல இடை­யூ­று­கள் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

பெரு­வில் அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.