தூங்காது பணிசெய்யும் அற்புதத் தாதிகள்

தூங்காது பணிசெய்யும் அற்புதத் தாதிகள்

1 mins read
8385a96a-4911-49cc-bbc2-2374686ea1cc
-
multi-img1 of 2

ஒவ்வொரு நோயாளியையும் தேடிச் சென்று மருந்து கொடுக்கும். அதோடு, தன் அகன்ற திரை மூலம் நோயாளிகள் மருத்துவர்களுடன் மெய்நிகர் ஆலோசனைகளையும் பெறவும் உதவும்.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலின் உச்சக்கட்டத்தில், கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கவனிக்க சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ​​சமூக சிகிச்சை மையங்களில் நோயாளிகளைக் கவனிப்பதில் Temi-Bot எனப்படும் இந்த இயந்திர மனிதர்கள் (இடது படம்) பெரிதும் கைகொடுத்தன. அமெரிக்காவை தளமாகக்கொண்ட நிறுவனம் இந்த இயந்திரத்தை உருவாக்கியது.

இதைப் போலவே, இவை போன்ற மேலும் பல சுகாதாரத் துறையில் சேவை வழங்குகின்றன.

பலதுறை மருந்தகங்களில் 'ஹிரோ' என சுருக்கமாக அழைக்கப்படும் அங்கு வருவோரின் உடல்வெப்பநிலையைக் கணக்கிடுவது, முகக்கவசம் அணியுமாறு நினைவூட்டுவது போன்றவை உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. அத்துடன் கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழிக்கக்கூடிய புறஊதா விளக்குகளை இது பயன்படுத்துகிறது. வருகையாளர்கள் எந்தெந்த சேவை முனைக்குச் செல்ல வேண்டும் என வழிநடத்தும். நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் இதனை உருவாக்கி உள்ளனர்.