கண்காட்சியில் களைகட்டிய தமிழ் குறும்படங்கள்

கண்காட்சியில் களைகட்டிய தமிழ் குறும்படங்கள்

2 mins read

பொன்­மணி உத­ய­கு­மார்

தெமா­செக் பல­து­றைத் தொழிற் கல்­லூ­ரி­யில் ஆண்­டு­தோ­றும் நடை­பெ­றும் 'டிசைன் ஷோ' என்ற வடி­வ­மைப்பு கண்­காட்­சிக்கு இவ்­வாண்டு முதல் முறை­யாக இரண்டு தமிழ் குறும்­ப­டங்­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இறுதி ஆண்­டில் பயி­லும் மாண­வர்

களின் படைப்­பு­கள் மார்ச் 10ல்­இருந்து 15ஆம் தேதி வரை நடை­பெற்ற 'டிசைன் ஷோ 2023' கண்­காட்­சி­யில் இடம்­பெற்­றன.

நீடித்த நிலைத்­தன்மை மற்­றும் சமூக மாற்­றங்­க­ளைப் பிர­தி­ப­லிக்­கும் வண்­ணம் தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் 360 இறுதி ஆண்டு மாண­வர்­க­ளின் படைப்­பு­கள் அமைந்­தன. 'டுமோ­ரோஸ் கிரி­யேட்­டிவ்ஸ்' என்ற கருப்­பொ­ரு­ளில் வடி­வ­மைப்­புப் பள்ளி மாண­வர்­க­ளின் படைப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­டன.

மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நேர­டி­யாக நடை­பெ­றும் இந்­தக் கண்­காட்­சி­யில் ஊட­கத் துறை மாண­வர் ஸ்ரீராம் செந்­தில்­கு­மார், 19, தமது இறுதி ஆண்டு படைப்­பாக தமிழ் குறும்­ப­டம் ஒன்­றைத் தயா­ரித்து திரை­யிட்­டுள்­ளார்.

மின்­னி­லக்­கத் திரைப்­ப­டம், தொலைக்­காட்சி சார்ந்த பட்­ட­யச் சான்றிதழ் பெற­வி­ருக்­கும் இவர், தலை­முறை தலை­மு­றை­யாக ஏற்­படும் மன­பா­திப்பைப் பிர­தி­ப­லிக்­கும் விதத்­தில் 'இரத்த மாலை' என்ற குறும்­ப­டத்தை இயக்­கி­யுள்­ளார். குறும்­ப­டத்­தின் கதா­பாத்­தி­ரங்­கள் எவ்­வாறு இந்த மன பாதிப்­பி­லி­ருந்து மீண்டு வரு­கின்­ற­னர் என்­பது இவ­ரது குறும்

படத்­தின் கதை­க் க­ள­மாக அமைந்­துள்­ளது.

பள்ளிப் பரு­வத்­தில் தாம் நேரில் கண்ட இறு­திச் சடங்கு ஒன்­றில் குடும்ப உறுப்­பி­னர்­கள் வெகு நாள்­கள் கழித்து ஒன்று கூடி­யதைக் கண்ட இவர், அந்­தச் சம்­ப­வத்­தைத் தழுவி திரைக்

கதை எழு­தி­யுள்­ளார்.

இக்கதையைத் தமிழில் மிகவும் இயல்பான முறையில் படம்பிடிக்க முடிந்ததாக இவர் கூறுகிறார். தலை­முறை தலை­

மு­றை­யாக மனபா­திப்பு ஏற்­படு வது தெற்­கா­சிய குடும்­பங்­களில் அதி­க­மாக காணப்­ப­டு­வ­தும் இவர் இந்­தத் தலைப்பைத் தேர்ந்­தெ­டுத்­த­தற்­குக் கார­ண­மா­கும். இந்­தியப் பெற்­றோர் தங்­கள் உணர்­வு­களை வெளிப்­ப­டை­யாக பகிர்ந்துகொள்ள வேண்­டும் என்­பதை இவ­ரது குறும்­ப­டம் வலி

­யு­றுத்­து­கிறது. திரைப்பட இயக்­கு­ந­ராக விரும்­பும் ஸ்ரீராம், தாம் தயா­ரித்­துள்ள இந்தக் குறும்­படத்­திற்­காக தேசிய இளை­யர் மன்­றத்­தின் 'மாற்­றத்தை உரு­வாக்­கு­வோர் மானி­யத்தை' பெற்­றி­ருக்­கி­றார்.

நீடித்த நிலைத்­தன்­மையைத் தக்கவைத்­துக்­கொள்­ளும்­படி

கட்­டு­மான திட்­டங்­கள் இருக்க வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கி­றார் 20 வயது மித்ரா நாயுடு. பறவை இனம் வாழ்­வ­தற்குத் தகுந்தவாறு கட்­ட­டங்­களை வடி­வ­மைப்­பது நன்று என்று நம்­பும் மித்ரா, வன­வி­லங்­குகளை அகற்றி மனித வாழ்வை மேம்­ப­டுத்­து­வதைக் காட்­டி­லும் அவற்­று­டன் ஒன்­றி­ணைந்து வாழ்­வதை விரும்­பு­கி­றார்.

இவர் வடி­வ­மைத்­துள்ள 'த ஹேவன்' எனும் விடு­முறை விடுதி பற­வை­க­ளுக்கு அடைக்­க­லம் அளிக்­கும் விதத்­தில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூ­ரில் நிலப் பற்­றாக்­குறை இருக்­கும் நிலை­யில் வன­வி­லங்­கு­க­ளுக்குத் தனி­யாக இடம் ஒதுக்­கு­வதைத் தவிர்த்து மனி­தர்­கள் உல­வும் இடத்­தி­லேயே விலங்­கு­க­ளுக்­கும் இடம் கொடுக்­கும் வண்­ணம் இவ­ரது படைப்பு வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் படைப்­புக்­காக இவர் வெளி­நா­டு­களில் நீடித்த நிலைத்­தன்­மையைக் காக்­கும் விதத்­தில் உருவாக்கப்பட்டுள்ள திட்­டங்­கள் குறித்து ஆராய்ச்சி செய்­தி­ருக்­கி­றார்.