வேறெதிலும் கிட்டாத நிறைவை கண்டார்

3 mins read
e8b4bd16-8ab3-4371-b789-8cf2ca64070f
-

வெளிப்­பு­றத் துறை­யில் பணித்­தேக்­கம் அடை­வது குறித்த கவலை­கள் வேண்­டாம் என்­றார், பயிற்­று­விப்­பா­ள­ராக இணைந்து தற்­போது குழு நிர்­வா­கி­யாக பணி­யாற்றி வரும் டிரேசி டிக்­ருஸ் (படம்). பல்­க­லைக்­க­ழக பட்­ட­தா­ரி­யாக அவர் முதன்­மு­த­லில் மேற்­கொண்­டது, ஓபி­எஸ்­ஸின் பயிற்­று­விப்­பா­ளர் பணியே. பணி­யின்­மீது கொண்ட ஆர்­வத்­தால் இத்­து­றை­யி­லேயே கடந்த ஐந்­தாண்­டு­க­ளாக தங்­கி­விட்­டார் 28 வயது டிரேசி.

இவ­ரின் பிர­தான கவ­லை­யாக இருந்­தது, அலு­வ­லக வாழ்க்கை கட்­ட­மைப்­பில் முடங்­கு­வதே. சிங்­கப்­பூ­ரின் பர­ப­ரப்­பான, அவ­சர வேலை வாழ்க்­கையை டிரேசி வெறுத்­தார். 9-5 எனும் கட்­ட­மைப்­புக்­குக் கட்­டுப்­ப­டக் கூடாது என்று திண்­ண­மாக இருந்­தார். அவ­ரின் விருப்­பங்­க­ளுக்கு இணங்க அமைந்­தது, ஒவ்­வொரு நாளும் மாறு­பட்ட புது அனு­ப­வங்­களை வழங்­கும் ஓபி­எஸ்.

வெளிப்­புற நட­வ­டிக்கை துறை­யில் டிரே­சிக்கு எவ்­வித அனு­ப­வ­மும் ஏற்ற பின்­ன­ணி­யும் இருந்­த­தில்லை. அவர் தேசிய தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்­றதோ ஆங்­கில இலக்­கி­யம். சிறிய உரு­வம் கொண்­டி­ருந்த அவ­ருக்கு, இது தனது பணி­யில் குறுக்­கீ­டாக இருக்­குமோ என்ற சந்­தே­கம் இருந்­தது. எனி­னும், இவற்றை தடை­க­ளாய் கரு­த­வில்லை டிரேசி. மாறாக, அவை தன்னை செதுக்­கும் சவால்­க­ளென கருதி அவர் இம்­மு­யற்­சி­யில் தொடர்ந்து உழைத்­தார்.

வேறு­பட்ட ஒரு களத்­தில் பணி­பு­ரி­ய­வும் அதில் சிறந்து விளங்­க­வும் பல்­க­லைக்­க­ழ­கம் முடிந்த கையோடு தனக்­குத் தானே சவால் விடுத்­தி­ருந்­தார் டிரேசி. அறி­மு­க­மில்­லாத திறன்­க­ளைக் கற்­றுக்­கொண்டு அவற்­றின் துணை­கொண்டு வளர்­வ­தற்கு அவர் முன்­னு­ரிமை அளித்­தார். அதில் அவர் கொண்­டி­ருந்த விடா­மு­யற்­சி­யி­னா­லும் உழைப்­பி­னா­லும் பணி­சார்ந்த சவால்­களை தகர்த்து பணி­யில் உயர முடிந்­தது அவ­ரால்.

சிங்­கப்­பூர் காவல்­துறை பயிற்சி படை மாண­வர்­க­ளு­டன் 19 நாட்­கள் செல­வ­ழித்த அனு­ப­வம் டிரே­சி­யின் மன­தில் நீங்கா இடம் பிடித்­துள்­ளது. பொது­வாக குறு­கிய காலத்­தையே மாண­வர்­க­ளு­டன் செல­வி­டும் நிலை­யில் இவ்­வாய்ப்பு சிறப்­பு­மிக்­க­தாக அமைந்­தது. 19 நாள் நீடித்த இந்த ஓபி­எஸ் முகாம் வாயி­லாக மாண­வர்­கள் தங்­க­ளின்­மீதே நம்­பிக்கை கொள்ள தொடங்­கி­யதை நேரில் கண்­டார் டிரேசி.

தங்­க­ளின் உள்­ளும் தலை­மைத்­துவ பண்­பு­கள் இருப்­பது மாண­வர்­க­ளுக்கு புலப்­பட்­டது. பயிற்­று­விப்­பா­ளர்­க­ளான தங்­க­ளு­ட­னும், சக மாண­வர்­க­ளு­ட­னும் இன்­னும் நெருக்­க­மான பந்­தங்­களை அவர்­கள் ஏற்­ப­டுத்­திக் கொண்­டி­ருந்­த­னர்.

பல பணி­களில் ஊழி­யர்­கள் தாங்­கள் ஏற்­ப­டுத்­தும் தாக்­கத்தை கண்­கூ­டாக காணவோ உண­ரவோ முடி­வ­தில்லை. அந்த வாய்ப்­பினை ஓபி­எஸ் தனக்கு நல்­கி­யுள்­ளதை உணர்ந்­தார் டிரேசி. மாண­வர்­க­ளின்­மீது தான் கொண்­டி­ருந்த தாக்­கத்­தைக் கண்­ட­போது அவர் நெகிழ்ந்­தார்.

"இப்­பணி எளி­தா­ன­தாக தோன்­ற­லாம். ஆனால், படகு வலித்­தல், ஏறு­தல், வழி­செ­லுத்­து­தல் என பல்­வேறு முக்­கிய திறன்­களை பயிற்­று­விப்­பா­ளர்­கள் வளர்த்­துக்­கொள்­வது அவ­சி­யம். அதே சம­யம், இளை­யர்­களை பயிற்­சி­க­ளின்­மூ­லம் மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் பயிற்­று­விப்­பா­ளர்­கள் உத­வ­வேண்­டும்," என்­றார் டிரேசி.

இப்­படி பல­வ­கை­யான பொறுப்­பு­களை ஒருங்கே கையாள எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­ற­னர் ஓபி­எஸ் பயிற்­று­விப்­பா­ளர்­கள். முழுமை கல்வி அளிப்­பதே இத்­திட்­டத்­தின் நோக்­கம் என்­பதை அவர்­கள் மறக்­க­லா­காது. அதற்­கேற்ப, அவர்­க­ளின் அனு­ப­வத்தை வடி­வ­மைப்­பது பயிற்­று­விப்­பா­ளர்­க­ளின் கையிலே உள்­ளது.

இதையே டிரேசி குழு நிர்­வா­கி­யாக பெரி­தும் வலி­யு­றுத்தி வரு­கி­றார். புது, இளைய ஓபி­எஸ் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளுக்கு தற்­போது வழி­காட்­டும் அவர், பயிற்­று­விப்­பா­ளர்­க­ளின் வேலைப் பய­ணங்­க­ளுக்கு ஊட்­ட­மும் அளிக்­கி­றார். எவ்­வாறு தொடர்ந்து இப்­ப­ணி­யில் வள­ர­லாம்; தங்­களை எவ்­வாறு மென்­மே­லும் மேம்­ப­டுத்­திக் கொள்­ள­லாம் முத­லி­ய­வற்றை குறித்து இளைய பயிற்­று­விப்­பா­ளர்­கள் டிரே­சி­யி­ட­மி­ருந்து கற்­றுக்­கொள்­கின்­ற­னர்.

ஓபி­எஸ்­ஸில் பணி­பு­ரி­வோர் இவ்­வ­கை­யில் ஒரு குடும்­ப­மா­கவே இயங்­கு­கின்­ற­னர் என்­பது டிரே­சி­யின் பார்வை. வாரத்­தில் ஐந்து நாட்­கள் வரை வீட்­டை­யும் குடும்­பத்­தி­ன­ரை­யும் பிரிந்து இருந்­தா­லும், ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தேவை­யான ஆத­ரவை அளித்­துக்­கொண்டு உத­விக்­கொள்­வ­தாக தெரி­வித்­தார் டிரேசி.

ஓபி­எஸ்­ஸின் பணிச்­சூ­ழல் குறித்து விவ­ரிக்­கை­யில், "வெளிப்­பு­றமே எங்­க­ளது அலு­வ­ல­கம். கட­லி­லும் காட்­டி­லும், மழை, வெயி­லி­லும் இடையே நாங்­கள் பணி­பு­ரி­கி­றோம். சூரி­யோ­த­ய­மும் அஸ்­த­ம­ன­மும் எங்­களை தின­மும் வர­வேற்­கும் காட்­சி­கள்," என்­றார் அவர்.

இந்த அனு­ப­வங்­கள் டிரே­சியை தனிப்­பட்ட முறை­யில் வளர்த்­தும் செதுக்­கி­யும் உள்­ளன. அவ­ரின் பார்­வை­களை மாற்­றி­ய­மைத்­த­து­டன், குறு­கி­யக் கால வாழ்க்­கையை முழு­மை­யாக ரசித்து வாழும் உணர்வை அவ­ருக்கு தந்­துள்­ளன. பணி­யில் மட்­டு­மின்றி, வாழ்க்­கை­யி­லும் நல்ல தலை­வ­ராக அவர் உரு­வெ­டுத்­துள்­ளார்.