தினந்தோறும் புது அனுபவம் தரும் ஓபிஎஸ்

தினந்தோறும் புது அனுபவம் தரும் ஓபிஎஸ்

3 mins read
e5090e7e-e6bd-4952-bbd5-69940088b980
-

வேறுபட்ட துறை பின்னணிகளிலிருந்து வந்த டிரேசியும் இக்பாலும் வெளிப்புற நடவடிக்கை துறையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். என்ன எதிர்பார்ப்பது என்பது குறித்து குறைந்த அளவிலான தகவல்களும் அனுபவமும் அவர்களுக்கு இருந்தது. புதிய முயற்சியில் இறங்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கை (ஓபிஎஸ்) பயிற்றுவிப்பாளர்களாக இருவரும் இணைந்தனர்.

"இளையர்களுடன் பணிபுரியும் வாய்ப்பைத் தந்தது"

திரு இக்­பால் கான் தனது பத்­தாண்டு கால பணி பய­ணத்­தில் அடி­யெ­டுத்து வைத்த துறை­கள் பல. தற்­போது சிங்­கப்­பூர் வெளிப்­புற நட­வ­டிக்கை (ஓபி­எஸ்) பயிற்­று­விப்­பா­ள­ராக பணி­பு­ரிந்து வரும் அவர், இதற்கு முன், தீய­ணைப்­பா­ள­ராக, நிகழ்வு நிர்­வா­கி­யாக, துணை இயக்க நிர்­வா­கி­யாக பல்­வேறு பரி­மா­ணங்­களை மேற்­கொண்­டுள்­ளார். இப்­ப­ய­ணத்­தில், தன்னை வழி­ந­டத்தி சீர்­ப­டுத்­திய ஆசி­ரி­யர்­களை நினை­வில் வைத்­தி­ருந்­தார் திரு இக்­பால். அத்­த­கைய நல்ல தாக்­கத்தை இளை­யர்­க­ளி­டத்­தில் ஏற்­ப­டுத்­தும் அவ­ரது அவா­வுக்கு ஏற்ப அமைந்­தது, ஓபி­எஸ்­ஸின் பயிற்­று­விப்­பா­ளர் பணி.

வெளிப்­புற நட­வ­டிக்கை துறை அளிக்­கும் வேறு­பட்ட வாய்ப்­பு­கள் இத்­து­றை­யில் தனது ஆர்­வத்தை கண்­ட­றிந்த திரு இக்­பா­லின் மன­துக்கு நெருக்­க­மா­னவை. இள­மை­யாக உண­ர­வைக்­கும் இளை­யர்­க­ளு­டன் சிரித்து உரை­யாடி நற்­பண்­பு­களை புகட்­டு­வது, காலை­யில் காணும் சூரிய உத­யம், நீண்­ட­தூர நடை பய­ணங்­கள் என அவரை கவர்ந்­துள்ள அங்­கங்­கள் பல. முழுக்க முழுக்க வெளிப்­புற இயற்கை சூழ­லில் பயிற்சி மேற்­கொண்டு மாண­வர்­களை வழி­ந­டத்­து­வ­தில் அவர் இன்­பம் காண்­கி­றார்.

எட்டு ஆண்­டு­க­ளுக்­குப் பின் பல்­க­லைக்­க­ழ­கம் சென்று இளங்­கலை பட்­டம் பெற்ற திரு இக்­பால் வகுப்­பறை தாண்­டிய கல்­வியை நம்­பியே வேலைத்­து­றை­யில் கால் வைத்­த­வர். வகுப்­பறை கல்­வி­யையே ஆக முக்­கி­ய­மாக கரு­தும் போக்கோ தற்­போது அதி­க­ரித்து வரும் நிலை­யில், வெளி­யி­லும் தங்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான ஏரா­ள­மான வாய்ப்­பு­கள் உண்டு என்­பதை உணர்த்­து­வ­தில் ஓபி­எஸ் பயிற்­று­விப்­பா­ளர்­கள் பங்­காற்­று­வ­தாக கூறி­னார் திரு இக்­பால்.

ஓபி­எஸ் முகா­முக்­குப் பல்­வேறு பின்­ன­ணி­க­ளி­லி­ருந்து வரு­கின்­ற­னர் மாண­வர்­கள். பல­முறை, ஒரு­வரை ஒரு­வர் இம்­மு­காம் மூலமே அவர்­கள் தெரிந்­து­கொள்­வர். பலர் வீட்­டை­யும் குடும்­பத்­தை­யும் பிரிந்து இத்­தனை நாள் இருந்­தி­ருக்­க­மாட்­டார்­கள். இவர்­க­ளுக்கு ஆத­ர­வும் ஆறு­த­லும் அளிப்­பது பயிற்­று­விப்­பா­ளர்­க­ளின் முக்­கிய கடமை. இம்­மு­காம் மூலம் கிட்­டக்­கூ­டிய கல்­வி­யைப் பாடங்­க­ளாய் நேர­டி­யாக புகட்­டா­மல், அதனை அணு­கு­வ­தற்கு பயிற்­று­விப்­பா­ளர்­கள் சரி­வர வழி­காட்­ட­வேண்­டும்.

"கவ­னச்­சி­த­றல்­க­ளுக்­குக் கார­ண­மாக இருக்­கும் கைபேசி, கணினி முத­லி­யவை இன்றி, வீட்­டில் இருக்­கும் வச­தி­கள் இன்றி, வாழ்­நாள் முழுக்க நீடிக்­கும் நினை­வு­களை ஏற்­ப­டுத்­திக் கொள்ள ஓபி­எஸ் முகாம் வழி­வ­குக்­கிறது. எதி­லும் எங்­கும் புதிய விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொள்­ளும் வாழ்­நாள் கல்­வியை இது மாண­வர்­க­ளி­டத்­தில் மட்­டு­மின்றி, எங்­க­ளி­டத்­தி­லும் வலி­யு­றுத்­து­கிறது," என்­றார் 29 வயது திரு இக்­பால் கான். இத­னால், தான் வேலை மாறி­ய­தில் எவ்­வித வருத்­த­மும் இல்லை என்­றும் அவர் கூறி­னார்.

ஒவ்­வொரு வார­மும் ஐந்து நாள் நீடிக்­கும் கல்வி அமைச்சு-ஓபி­எஸ் முகாம் திட்­டத்தை வழி­ந­டத்­து­கின்­ற­னர் ஓபி­எஸ் பயிற்­று­விப்­பா­ளர்­கள். எனவே, வாரத்­தில் ஐந்து நாட்­கள் வரை இவர்­கள் ஓபி­எஸ் வளா­கங்­கள் ஒன்­றில் தங்­கி­யாக வேண்­டும். இதுவே மாறு­பட்ட, தனித்­து­வ­மான ஓர் அனு­ப­வத்தை அளிப்­ப­தாக கரு­து­கி­றார் திரு இக்­பால்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

உடற்­ப­யிற்­சி­யில் திரு இக்­பா­லுக்கு ஈடு­பாடு உண்டு. ஆனால், பல­த­ரப்­பட்ட நில, நீர் நட­வ­டிக்­கை­க­ளைக் கொண்­டுள்ள ஓபி­எஸ்­ஸுக்கு அவர் புதிது. முதன்­மு­த­லில் பயிற்­று­விப்­பா­ளர் தேர்­விற்கு அவர் வந்த சம­யத்­தில், காயாக் பட­கில் துடுப்பு வலிக்­கத் தெரி­யா­தது அவ­ரின் கவ­லை­களில் ஒன்­றாக இருந்­தது.

ஓபி­எஸ்­ஸின் அடிப்­படை பயிற்­று­விப்­பா­ளர் பயிற்சி திரு இக்­பா­லின் கவ­லை­க­ளைப் போக்­கி­யது. பயிற்­று­விப்­பா­ள­ராக செவ்­வனே பொறுப்­பு­களை நிறை­வேற்­று­வ­தற்கு அவ­ருக்கு தேவைப்­பட்ட திறன்­களை இப்­ப­யிற்­சி­யின்­மூ­லம் அவர் பெற்­றுக்­கொண்­டார். அறி­மு­க­மில்­லாத வெளிப்­புற நட­வ­டிக்­கை­களில் கைதேர்ந்­த­வ­ரா­வ­தற்­கான வாய்ப்­பு­களை ஓபி­எஸ் வழங்­கும் கார­ணத்­தி­னால், கவலை வேண்­டாம்; மன­மி­ருந்­தால் போதும் என்­றார் திரு இக்­பால்.