சுற்றுச்சூழலை நேசிப்போம்; தூய்மை கடைப்பிடிப்போம்

சுற்றுச்சூழலை நேசிப்போம்; தூய்மை கடைப்பிடிப்போம்

4 mins read
fa649450-762c-432c-99f5-52e489551a14
-

பொது­மக்­களில் ஒரு­வ­ரான ஆன் சி, சிங்­கப்­பூ­ரில் உள்ள திடல்­களில் ஏரா­ள­மான எலி பொந்­து­கள் இருப்­பதை கவ­னித்­தார். அங்கு வந்து உண­வ­ருந்­து­ப­வர்­கள் விட்­டுச்­செல்­லும் உணவு கழி­வு­களும் குப்­பை­களும் இச்­சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று அவ­ருக்கு தோன்­றி­யது. மக்­கள் தங்­க­ளது குப்­பை­களை சரி­யான முறை­யில் அப்­பு­றப்­ப­டுத்­தி­னால் இதை களை­ய­லாம் என்­பது அவ­ரின் எண்­ணம்.

மற்­றொ­ரு­வ­ரான சென் சியு­சியா, கிட்­டத்­தட்ட அன்­றா­ட­மும் தமது அக்­கம்­பக்­கத்­தில் குப்பை பொறுக்கி சுத்­தப்­ப­டுத்­து­கி­றார். தமது வட்­டா­ரத்­தில் குப்பை குவி­வது அதி­க­ரிப்­ப­தாக அவர் முறை­யிட்­டார். ஒரு மணி நேரத்­தி­லேயே மூன்­றி­லி­ருந்து ஐந்து பைகள் வரை குப்­பை­யி­னால் நிரம்பி விடு­கி­ற­தாம்.

மார்ச் 18ஆம் தேதி அன்று, சாவ்­பா­வும் தேசியச் சுற்றுப்புற அமைப்பும் இணைந்து "எனது கட­மை­யல்­லவே? சிங்­கப்­பூ­ரின் பொது சுகா­தா­ரத்­துக்­காக இணைந்து உழைப்­பது." எனும் நேரடி கலந்­து­ரை­யா­டலை நடத்­தின. சிங்­கப்­பூ­ரின் சமூக கட்­டி­றுக்­கத்தை வலுப்­ப­டுத்­தும் நோக்­கில் நாடெங்­கி­லும் உள்ள மக்­களை ஒன்­றி­ணைக்­கும் முன்­னே­றும் சிங்­கப்­பூர் திட்­டத்­தின் ஓர் அங்­க­மாக இக்­க­லந்­து­ரை­யா­டல் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சுக்­கான மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் திரு பே யாம் கெங், பொதுச் சுகா­தார மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் ஃபூ சுவான் ஃபாங், எல்.எஸ் 2 ஹோல்­டிங்ஸ் லிமி­டெட்­டின் தலைமை இயக்க அதி­காரி டான் வெய் யிங், சூ-சி அற­நி­று­வ­னத்­தின் நீடித்த நிலைத்­தன்மை நிர்­வாகி சூசன் டான் ஆகி­யோர் கலந்­து­ரை­யா­ட­லில் பேசி­னர். இவர்­க­ளு­டன், பங்­கேற்­பா­ளர்­கள் 70 பேர், சிங்­கப்­பூ­ரின் பொது சுகா­தா­ரத்­துக்கு எதி­ரான இடை­யூ­று­க­ளைப் பற்­றிய கருத்­துக்­க­ளை­யும் சிந்­த­னை­க­ளை­யும் ஆலோ­சித்­த­னர்.

2021ஆம் ஆண்­டின் பொது சுகா­தார நிறைவு ஆய்வு முடி­வு­களை திரு பே குறிப்­பிட்­டார். இதன்­படி, பொது­மக்­களில் 73% சிங்­கப்­பூரை சுத்­த­மாக வைத்­தி­ருப்­பது அர­சாங்­கத்­தின் பொறுப்பு என நம்­பி­னர். 2019ல் இந்த விகி­தம் 58% ஆக இருந்­தது.

பொது இடங்­கள், வச­தி­க­ளின் பாது­காப்­பை­யும் சுகா­தா­ரத்­தை­யும் சரி­பார்ப்­ப­தில் அர­சாங்­கத்­துக்கு பொறுப்­பும் கட­மை­யும் இருக்­கும் அதே வேளை­யில், அர­சாங்­கத்­தால் மட்­டும் பொது சுகா­தா­ரத்தை பேண முடி­யாது என்­றும் அர­சாங்­கத்­துக்­கும் பொது­மக்­க­ளுக்­கும் இடையே ஒத்­து­ழைப்பு அவ­சி­யம் என்­றும் திரு பே விளக்­கி­னார்.

தியோங் பாரு சந்­தை­யில் துப்­பு­ர­வா­ள­ராக பணி­பு­ரி­யும் 81 வயது சியாவ் ஹுவெ கியாவ், ஒரு­முறை மேசையை சுத்­தப்­ப­டுத்­திக் கொண்­டி­ருந்­த­போது பயன்­ப­டுத்­தப்­பட்ட டயப்­பர் ஒன்­றினை ஒரு வாடிக்­கை­யா­ளர் தட்­டு­க­ளின்­மீது வீசி­யதை அவர் நினை­வு­கூர்ந்­தார். டயப்­பரை குப்­பைத்­தொட்­டி­யில் போடு­மாறு அவர் வேண்­டிக்­கொண்­ட­போது அவ்­வா­டிக்­கை­யா­ளர் தம்மை கண்­டித்­த­தா­க­வும், தட்­டுக்­க­ளைக் கழு­வு­வது உட்­பட இதை­யும் கையாள்­வது துப்­பு­ர­வா­ளர்­க­ளின் பணியே என்று கூறி­ய­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

48 வயது துப்­பு­ர­வா­ளர் சியா சியு கியென், வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் தட்­டுக்­க­ளைத் திருப்பி வைக்க சொல்லி அன்­பாக கேட்­டுக்­கொண்­டா­லும் சிலர் அதனை மறுத்து எதிர்த்து பேசு­வ­துண்டு என்று கூறி­னார்.

பெர்சே உணவு நிலை­யத்­தில் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி சியா, விலை­கொ­டுத்து உண்­ணும் சில வாடிக்­கை­யா­ளர்­கள் துப்­பு­ரவு பணி­க­ளைத் துச்­ச­மாக மதிப்­ப­தைக் கண்­டுள்­ளார். துப்­பு­ர­வா­ளர்­கள் மென்­மை­யா­ன­வர்­க­ளாக ஆகி­விட்­ட­னர் என்றோ, அடக்­கம் இல்­லா­மல் நடந்­து­கொள்­கின்­ற­னர் என்றோ வாடிக்­கை­யா­ளர்­கள் வசை­பா­டு­வர். மேசை­களை சுத்­தம் செய்­வ­தோடு, கழி­வு­களும் மெல்லிழைத்தாட்­களும் சித­றி­கிடக்­கும் பொதுக் கழி­வ­றை­களை நாள்­தோ­றும் மூன்று முறை சுத்­தம் செய்­வ­தும் திரு­வாட்டி சியா­வின் பணி­யா­கும்.

துப்­பு­ர­வா­ளர்­க­ளின் அனு­ப­வங்­க­ளைக் கேட்டு, இச்­சிக்­க­லைக் களைய அர­சாங்­கம் புது நட­வ­டிக்­கை­களை திட்­ட­மிட்­டுள்­ள­தாக திரு பே விளக்­கி­னார். "அப­ரா­தம் விதிக்­கப்­ப­டு­வ­தோடு, குப்பை போடு­வோ­ருக்கு சைனா­ட­வுன் போன்ற கூட்­ட­மான இடங்­களில் குப்பை பொறுக்­கு­வது கட்­டா­ய­மாக்­கப்­படும். இதன் மூலம், பொது துப்­ப­ர­வா­ளர்­க­ளின் கடு­மை­யான உழைப்பு குறித்து அவர்­கள் அறி­வர்," என்­றார் அவர்.

சிறு நில­ப­ரப்பு கொண்­டி­ருக்­கும் போதி­லும் சிங்­கப்­பூர் 52,700 துப்­பு­ர­வா­ளர்­களை பணி­ய­மர்த்தி உள்­ள­தாக டாக்­டர் ஃபூ கூறி­னார். "நமது துப்­பு­ர­வா­ளர்­களில் சிலர் வெளி­நாட்டு ஊழி­யர்­கள். சிலர் நமது தாத்தா பாட்­டி­யைப் போன்ற மூத்­தோர். உங்­க­ளை­யும் என்­னை­யும் போல அவர்­களும் சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொ­கையை சேர்ந்­தோரே. அவர்­க­ளின் பணியை நாம் புரிந்­து­கொள்­வது அவ­சி­யம்."

"குப்பை போடு­வது சுல­பம். அதை சுத்­தப்­ப­டுத்­து­வதே கடி­னம். துப்­பு­ர­வா­ளர்­கள் குனிந்­தும் ஆங்­காங்கே ஓடி­யும் குப்பை பொறுக்­க­வேண்­டும். மூத்த துப்­பு­ர­வா­ளர்­க­ளுக்கு இது குறிப்­பாக சவால்­மிக்­கது. நாம் குப்­பை­போடு­வதை நிறுத்­தியே ஆக­வேண்­டும்," என்­றார் டாக்­டர் ஃபூ.

"அதிகாலையில் அயராது உழைக்கும் துப்புரவாளர்களினால் ஒவ்வொரு காலையும் மாசற்ற சூழலில் நமது நாட்களை தொடங்குகிறோம். ஒருவேளை நாட்டின் எல்லா துப்புரவாளர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டால், சிங்கப்பூர் பொது சுகாதாரத்தின் உண்மை நிலை அச்சமயம் அம்பலமாகும்," என்று திரு பே கூறினார்.

அண்­மை­யில் பாரி­ஸில் கழிவு அகற்­றும் ஊழி­யர்­க­ளின் வேலை­நி­றுத்­தத்­தால் 7,000 டன்­னுக்­கும் மேற்­பட்ட குப்பை குவிந்­தது. கடந்த ஆண்டு அக்­டோ­பர் 30ஆம் தேதி அன்று, சிங்­கப்­பூ­ரின் பொதுச் சுகா­தார மன்­றம் எஸ்.ஜி சுகா­தார நாள் நிகழ்வை நடத்­தி­யது. அதன்­கீழ், ஆர்ச்­சர்ட் சாலை துப்­பு­ர­வா­ளர்­கள் இல்­லா­மல் இருந்த நேரத்­தில், தொண்­டூ­ழி­யர்­கள் ஒரு மணி நேரத்­தி­லேயே நூற்­றுக்­கும் மேற்­பட்ட குப்பைப் பைகளை நிரப்­பி­னர். தங்­க­ளுக்­காக எல்­லாம் சுத்­த­மாக இருக்­க­வேண்­டும் என்று எதிர்­பார்ப்­ப­தை­விட சிங்­கப்­பூரை தூய்­மை­யாக வைத்­துக்­கொள்­வ­தற்கு தனி­ந­பர்­கள் தனிப்­பட்ட அள­வில் பொறுப்பு வகிக்க வேண்­டும் என்பதை இந்த நிகழ்வு நினை­வூட்­டி­யது.