துப்புரவுத்துறையில் உள்ள சவால்களும் முயற்சிகளும், அரசாங்கத்தின் பங்கும்

துப்புரவுத்துறையில் உள்ள சவால்களும் முயற்சிகளும், அரசாங்கத்தின் பங்கும்

3 mins read
6ff9e982-6fb1-497c-86e2-850831739f88
-

குறை­வான ஊழி­யர் எண்­ணிக்கை துப்­பு­ரவு துறை எதிர்­நோக்­கும் ஒரு சவா­லென குறிப்­பிட்­டார் எல்.எஸ் 2 ஹோல்­டிங்ஸ் லிமி­டெட்­டின் தலைமை இயக்க அதி­காரி டான் வெய் யிங். கழி­வ­றை­க­ளைச் சுத்­தப்­ப­டுத்­தும்­போது ஈரத் தரை­யில் வழுக்­கு­வது போன்ற கூடு­த­லான சவால்­களை மூத்த துப்­பு­ர­வா­ளர்­கள் தங்­க­ளின் பணி­யில் எதிர்­நோக்­கு­வதை முத­லா­ளி­கள் கருத்­தில் கொண்­டுள்­ள­னர்.

ஆனால், சமீப காலத்­தில், துப்­பு­ரவுத் துறை­யில் தொழில்­நுட்ப மாற்­றங்­க­ளை­யும் சுத்­தப்­ப­டுத்­து­வ­தில் உத­வும் இயந்­தி­ரங்­க­ளின் பயன்­பாட்­டை­யும் ஊக்­கு­விப்­ப­தற்கு அர­சாங்­கம் முயற்­சி­கள் எடுத்­துள்­ளது என அவர் கூறி­னார். "பேராங்­கா­டி­களில் இத்­த­கைய இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தால் துப்­பு­ர­வா­ளர்­க­ளின் பணி எளி­தா­கி­யுள்­ளது. நெருக்­க­மான இடங்­க­ளை­யும் பணி­யி­டங்­க­ளை­யும் சுத்­தப்­ப­டுத்தி சூழ­லின் தரத்தை மேம்­ப­டுத்­து­வ­தில் கவ­னம் செலுத்­து­வ­தற்கு இது வாய்ப்­ப­ளிக்­கும்," என்று அவர் தெரி­வித்­தார்.

துப்­பு­ரவு மேற்­பார்­வை­யா­ள­ரான 65 வயது நேன்சி கோ, இந்த இயந்­தி­ரங்­கள் கழி­வ­றை­களில் இருக்­கும் இடை­வெ­ளி­க­ளி­லி­ருந்து அழுக்கை அகற்­று­வ­தற்கு உத­வு­வ­தாக பகிர்ந்­து­கொண்­டார். கழி­வ­றை­களை தூய்­மை­ப­டுத்­து­வ­தற்கு புது ஐ-மாப் இயந்­தி­ரத்தை பயன்­ப­டுத்த தமது ஊழி­யர்­க­ளுக்கு கற்று தந்­த­தன் பின்­னர், திரு­வாட்டி கோ அதற்­கான நல்ல வர­வேற்பை பெற்­றார்.

ஊழி­யர் ஈடு­பாட்­டை­யும் நேரத்­தை­யும் மிச்­சப்­ப­டுத்­து­வ­தோடு, துப்­பு­ர­வா­ளர்­கள் பாது­காப்­பாக பணி­யாற்­று­வ­தற்கு இவை கை கொ­டுக்­கின்­றன. அதிக நேரத்­துக்கு மண்­டி­யிட்­டும் அமர்ந்­தும் அவர்­கள் பணி­பு­ரிய தேவை­யில்லை.

"தொடக்­கத்­தில், பல மூத்த துப்­பு­ர­வா­ளர்­கள் புது தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தத் தயங்­கி­னர். இயந்­தி­ரத்தை இயக்­கு­வ­தற்­கான திறன் இல்லை, அல்­லது அதனை உடைத்­து­வி­டக் கூடும் என்று அவர்­கள் அஞ்­சி­னர். ஆனால், அவற்றை பயன்­படுத்தி பார்த்­த­தன் பின்­னர், அது வச­தி­யாக இருப்­பதை பாராட்­டி­னர்."

தொழில்­நுட்ப மேம்­பா­டு­களை துப்­பு­ரவுத் துறை­யில் ஊக்­கு­விப்­ப­தோடு, தேசியச் சுற்­றுப்­புற அமைப்பு துப்­பு­ர­வுத் துறை­யு­டன் இணைந்து உப­கார சம்­ப­ளங்­க­ளை­யும் வழங்கி வரு­வ­தாக திரு பே குறிப்­பிட்­டார். ஊழி­யர் குறை­பாட்­டினை சமா­ளிப்­ப­தற்கு இத்­து­றைக்­கென புது ஊழி­யர்­களை வளர்த்­தெ­டுப்­பது இதன் நோக்­கம்.

இது குறித்து கூறு­கை­யில், "துப்­பு­ரவுத் துறை­யில் மூத்­தோ­ரும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுமே இருக்­கின்­ற­னர் எனும் தவ­றான கருத்து பர­வ­லாக உள்­ளது. உப­கார சம்­ப­ளங்­க­ளின்­மூ­லம், இன்­னும் கூடு­த­லான இளம் தலை­மு­றை­யி­னர் இத்­து­றை­யில் இணை­வர் என்று நம்­பு­கி­றோம். இது இயந்­திர இயக்­கங்­கள், நிர்­வா­கம் ஆகி­ய­வற்­றில் இருக்­கும் சவால்­களை கையாள உத­வும்."

முழு­நேர தேசிய சேவை­யா­ள­ரான 23 வயது சைரஸ் எங் பூன் பிங் இத்­த­கை­ய­தோர் உப­கார சம்­ப­ளத்­தைப் பெற்­றுள்­ளார். பொறி­யி­யல் அறி­வி­ய­லில் பட்­ட­யப்­ப­டிப்பு மேற்­கொண்ட அவர் தேசிய சேவை முடிந்து துப்­பு­ரவுத் துறை நிறு­வ­ன­மான எல்.எஸ் 2 ஹோல்­டிங்ஸ் லிமி­டெட்­டில் இணைய உள்­ளார்.

"நிர­லி­டு­த­லின்­மூ­லம் துப்­பு­ரவு இயந்­தி­ரங்­க­ளுக்­கான கூடு­தல் இயக்­கங்­களை உரு­வாக்க முடிந்­தால், துப்­பு­ர­வா­ளர்­க­ளின் ஆக்­கத்தை என்­னால் கூட்ட முடி­யும். அதில் அர்த்­தம் காண்­கி­றேன்," என்­றார் திரு எங்.

பொறியியலாளர்களும் பலதரப்பட்ட ஊழியர்களும் துப்புரவு இயந்திரங்களின் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், துப்புரவாளர்களின் தேவைகளைக் கவனித்து புரிந்துகொள்ளக் கூடிய, உற்பத்தி பொருள் மேம்பாட்டுக்கான கருத்து தெரிவிக்கும் இளம் தலைமுறையினரை துப்புரவுத்துறை ஈர்க்கவேண்டும் என்று டான் வெய் யிங் கூறினார். உதாரணத்துக்கு, இயந்திரத் திரையிலும் பொத்தான்களிலும் பெரிய எழுத்துக்கள், கூடுதலான மொழித் தெரிவுகள், வெவ்வேறு அளவிலான இயந்திரங்கள் ஆகியவை மூத்த ஊழியர்களின் பயன்பாட்டை எளிதாக்குபவை.