பயனியர் தொடக்கப்பள்ளி மாணவர்களின் நோன்புப் பெருநாள் கவிதைகள்

பயனியர் தொடக்கப்பள்ளி மாணவர்களின் நோன்புப் பெருநாள் கவிதைகள்

1 mins read

இரை மறந்து; இறை தேடி

நிறை மனதோடு; நீங்காத கனவோடு

உனைக்காண வருகிறோம்!

முப்பது நாளும் முழுதாய் நோன்பிருந்து;

உனைத்தொழுது; பகிர்ந்துண்டு;

உன் அருளுக்காக ஏங்குகிறோம்!

எல்லாரும் நலம் வாழ

நல்லாரும் வழி கூற; தன்னிலை மறந்து

என்னிலை யாகினும்

உன் பாதம் தொட்டு வணங்குகிறோம்!

நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!

ஹசிகா

தொடக்கநிலை 5

சின்ன சின்ன ஆசை,

வீட்டை அலங்கரிக்க ஆசை,

புத்தாடை உடுத்திக்கொள்ள ஆசை,

பெற்றோரிடம் ஆசி பெற ஆசை,

உறவினர்களைச் சந்திக்க ஆசை,

பெருநாள் வாழ்த்துக் கூற ஆசை,

பிரியாணி திண்ண ஆசை,

கூடி விளையாட ஆசை!

ஆசை! ஆசை!

நோன்புப் பெருநாள் கொண்டாட ஆசை!

சிவசக்தி

தொடக்கநிலை 5

நோன்பு மாதம் - உறவினர் மற்றும் நண்பர்களுடன் மன்னிப்புத் தேடுவதற்கான மாதம். தானம் செய்து புண்ணியத்தைத் தேடும் மாதம். வலுவான உறவை மேம்படுத்துவதற்கான மாதம். இந்த நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியுடனும் அக்கறையுடனும் கொண்டாடுங்கள். நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!