- கும்பலிங்கம் உத்தமன்
ஆலமரம் கிளைகள் பரப்பி நிற்கிறது
அழகிய கரங்களை நீட்டி வரவேற்கிறது
அன்று போலவே என்றென்றும்
இருநான்கு திசைகளிலிருந்தும்
அரும்பெரும் ஆற்றல்மிகு குருவிகள்
ஆசை ஆசையாய் வந்தமர்கின்றன
தாய்மொழி பேசிச் சிலாகிப்பன சில
தரணியில் பெயர் பதிக்க விழைவன சில
உணவை மட்டும் கொரிப்பன சில
இறகைக் கோதிவிட்டுக்கொள்வனவும் உண்டு
மகிழ்வாகத் தமக்குள் கதைப்பனவும் உண்டு
பொழுதுபோக்கற்றுப் புறம் பேசித் திரிவனவும் உண்டு
விழித்துக்கொண்டவை மானுடம் பேணுவது நன்று
வீறுகொண்டவை நிலைபேறு பெறுவதும் நன்று
இன்னும் உயர உயரப் பறக்கும் உந்துதலே உண்டு.

