உதிரிகள்

உதிரிகள்

1 mins read

உதிரிகள்

 உருண்டோடுகிறது

பனி போர்த்திய

மலைவழிப் பாதையில்

சூரியக்கங்கு!

உறைகிறது மலை

சிவப்பாய்

 இரவுநிலத்தில்

தூவப்பட்ட

நட்சத்திர விதைகள்

முளைத்தன

வெளிச்சப்பயிர்கள்

ஆகாயவயலில்

 கொட்டித்தீர்த்தது

இரவுமழை

எந்தவித சலனமுமின்றி

முளைத்தது

சூரியக்காளான்

ஒரு காக்கையின்

அறை கூவலில்...

 கொண்டாட்டம்

ஒற்றை

சூரியன் கட்டிப்

போரடித்து

நட்சத்திர அறுவடை

வெளிச்சக்கதிர்களின்

ஆகாயவயலில்

 இரவுக்கடலில்

ஒற்றைத்தோணி

நிலா வெளிச்சக்கரை

நோக்கி

- இரா சத்திக்கண்ணன்