கோயிலை ஒட்டிய திருமண மண்டபம் புதிதாக மூன்று மாடிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. ஆண்டிறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் இந்த மண்டபத்தில் 700 இருக்கை கள் இருக்கும். அத்துடன் திருமண மேடை விரிவாக்கப் பட்டுள்ளது. எல்லாக் கட்டடங் களிலும் மின்தூக்கி அமைக் கப்பட்டுள்ளது. பழைய 'கார்த்திகை கட்டு' எனப்படும் சமையலறை இடிக்கப்பட்டு இரண்டு மாடிக் கட்டடம்
ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்டடங்களும் விரிவாக்கம் செய்யப்பட்டு ஒன்றோடு ஒன்று இணைக்கப் பட்டுள்ளன.
தேவாரம் பாடிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகி யோரின் ஐம்பொன் திருவுரு வங்கள் புதிதாக நடராஜர் சந்நிதியில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அங்கு எழுந்தரு ளியுள்ள மாணிக்கவாசகர் பெருமானோடு இணைவர்.

