குடமுழுக்கு திருநாளன்று அன்னதானம் காலை 10 மணிக்குத் தொடங்கும்.
ரிவர் வேலி ரோட்டிற்கு அருகிலுள்ள திடலில் அன்னதானம் நடைபெறும். மூலவரை தரிசனம் செய்வதற்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்க சுமார் 1,000 ஆலயத் தொண்டர்கள் செயல்படுவர். குடமுழுக்கு நிறைவுபெற்ற பின்னர் வெள்ளிரத புறப்பாடு இடம்பெறும் என்றும் திரு சாமிநாதன் குறிப்பிட்டார்.
45 நாள் மண்டலாபி ஷேகத்தின்போது இசை, நடனம் மற்றும் சொற்பொழிவு கள் நடக்கவுள்ளதாக கோயில் செயலாளர் திரு கண. முத்து கணபதி தெரிவித்தார்.
"புகழ்பெற்ற பாடகர்கள் எஸ்பிபி சரண், வீரமணி ராஜு, ஆன்மிகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் ஆகியோருடன் உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்களும் மேடையேறு வர்," என்று திரு கணபதி கூறினார்.

