கலையம்சம் பேசும் சிற்ப வேலைப்பாடுகள்

கலையம்சம் பேசும் சிற்ப வேலைப்பாடுகள்

2 mins read
d6940bfb-4c93-47c3-9c92-96d2851d8aee
-

குன்று இருக்­கும் இட­மெல்­லாம் கும­ரன் இருக்­கும் இடம் என்­ப­தற்கு ஏற்­றாற்போல் இந்­தக் கோயி­லின் ஐந்­த­டுக்கு கோபு­ரம் ஃபோர்ட் கேனிங் மலையை கிழக்­கு­மு­க­மாக நோக்­கு­கிறது.

இதில் நான்­கு­வி­த­மான கோடி பூதங்­கள், அட்­ட­திக்கு பால­கர்­கள், புராண சம்­ப­வங்­கள் உள்­ளிட்­டவை சிற்­பங்­க­ளாக இடம்­பெ­று­கின்­றன.

கோபு­ரத்­திற்­குப் பின்­னால் மூன்று கோயில் விமா­னங்­கள் உள்­ளன. தெண்­டா­யு­த­பாணி சந்­நி­திக்கு மேல் உள்ள விமா­னம் 28 அடி உய­ர­மா­னது.

விமா­னத்­தின் கிழக்­கில் தெண்­டா­யு­த­பாணி, மேற்­கில் நர­சிம்­மர், வடக்­கில் பிரம்மா, தெற்கில் தெட்­சி­ணா­மூர்த்தி ஆகிய தெய்­வங்­களின் சிற்­பங்­கள் உள்­ளன.

சிவ­பெ­ரு­மான் சந்­நி­திக்கு மேல் உள்ள 12 அடி விமா­னத்­தின் கிழக்­குப் பக்­கத்­தில் சோமாஸ்­கந்த மூர்த்தி, மேற்­கில் மகா­விஷ்ணு, வடக்­கில் பிரம்மா, தெற்­கில் தெட்­சி­ணா­மூர்த்­தி­யின் சிற்­பங்­கள் உள்­ளன.

மீனாட்சி அம்­மன் சந்­நி­திக்கு மேல் உள்ள 12 அடி விமா­னத்­தின் கிழக்­குப் பக்­கத்­தில் மீனாட்­சியை சொக்­க­நா­த­ருக்கு திரு­மால் கன்னிகா­தா­னம் செய்­தல், மேற்­குப் பக்­கத்­தில் வைஷ்­ணவி, வடக்­குப் பக்­கத்­தில் பிராம்மி, தெற்­குப் பக்­கத்­தில் மாகேஸ்­வரி ஆகிய சிற்­பங்­கள் உள்­ளன.

சிங்­கப்­பூ­ரில் இந்­தக் கோயி­லு­டன் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லும் ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயி­லும் இது­வரை மர­பு­டை­மைச் சின்­னங்­க­ளாக அறி­விக்­கப்­பட்ட இந்து ஆல­யங்­கள் ஆகும்.

தெண்­டா­யு­த­பாணி கோயி­லும் தேசிய மர­பு­டைமைச் சின்­ன­மாக அறி­விக்­கப்­பட்­ட­தால் எந்த வேலைப்­பா­டு­க­ளைச் செய்­தா­லும் அதற்கு உரிய முன் அனு­மதி தேவைப்­படும்.

"தெளி­வான வரை­ப­டத்­தைச் சமர்ப்­பித்து தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் ஆலோ­ச­னைப்­படி வேலை­க­ளைச் செய்து வரு­கி­றோம்," என்று கட்­ட­டக் குழு உறுப்­பி­னர் ச.வெங்­க­டா­ச­லம், 54, தமிழ் முரசிடம் தெரி­வித்­தார்.

முதி­யோ­ருக்­கும் உடற்குறை உள்ளோருக்கும் வசதி அளிக்­கும் வித­மாக கோயி­லின் இரண்டு பக்­கங்­க­ளி­லும் வழி அமைக்­கப்­ப­டு­வதா­க­வும் அவர் கூறி­னார்.