விடுகதைகள்

விடுகதைகள்

1 mins read
a1e4f884-1d90-431a-98c5-7ff956141123
-

1. கடலில் கலக்காத நீர்.. யாராலும் குடிக்க முடியாத நீர். அது என்ன?

2. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான், சிரிப்பான். அவன் யார்?

3. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?

4. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார்?

5. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன?

6. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி. அவள் யார்?

7. ஆலமரம் தூங்க, உலகமெல்லாம் தூங்க, பெருங்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?

8. ஓர் அரண்மனையில் 32 காவலர்கள். அவர்கள் யார்?

9. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. என்ன பூ?

10. மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்கின்றன கோடிப் பூக்கள். அவை என்ன?

விடைகள்: 1. கண்ணீர், 2. தொலைபேசி, 3. தேங்காய், 4. அலாரம், 5. தராசு, 6. முட்டை, 7. மூச்சு, 8. பற்கள், 9. சிரிப்பு, 10. நட்சத்திரங்கள்

ஒவ்வொரு விலங்கும் எத்தனை, எத்தனை உள்ளன என்பதைக் கண்டுபிடித்து, அவற்றை ஒட்டுமொத்தமாகக் கூட்டி என்ன விடை வருகிறது என்பதைக் கண்டுபிடியுங்கள் சிறுவர்களே!

12-06-2023 மாணவர் புதிருக்கான விடைகள்