தேசிய நூலக வாரியம் உடற்குறையாளருக்கு மேலும் வசதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதனை ஒட்டி வாரியம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உடற்குறையாளருக்கான எளிய உறுப்பியம் என்ற திட்டத்தை அமலாக்கியது. அது இப்போது நீட்டிக்கப்படுகிறது.
உடற்குறையாளர்கள் நூலகத்தில் இருந்து எடுத்துச்செல்லும் புத்தகங்களை 12 வார காலம் வைத்திருந்து பிறகு திருப்பித் தரலாம். இந்த கால அளவு இப்போது ஆறு மாதமாக இருக்கிறது.
புத்தகங்களை அவர்கள் இலவசமாக முன்பதிவு செய்து வைக்கவும் முடியும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் உடற்குறையாளருக்கான திட்டங்களில் இருப்பவர்கள், அரசாங்க நிதி உதவி பெறுகின்ற சிறப்புக் கல்வி பள்ளிக்கூட மாணவர்கள் இப்போது இந்த உறுப்பியத்தின் பலனை அனுபவிக்கிறார்கள்.
இது, எஸ்ஜி எனேபில், நூலக வாரியம், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றில் இடம் பெற்று இருப்போரையும் உள்ளடக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
நூலக வாரியம் மேல் விவரங்களை பின்னர் தெரிவிக்கும்.

