இந்தியாவின் கோதுமை ஏற்றுமதித் தடையால் உலகத்துக்கு மேலும் சிக்கல்

இந்தியாவின் கோதுமை ஏற்றுமதித் தடையால் உலகத்துக்கு மேலும் சிக்கல்

2 mins read

இந்தியா கோதுமை ஏற்றுமதிக்குத் தற்காலிக தடை விதித்ததை அடுத்து, உலகச் சந்தையில் கோதுமை விலைகள் பெருமளவு உயர்ந்துள்ளது.

கோதுமை விலையின் உயர்வு, அனுமதிக்கப்பட்ட உச்ச அளவு அதிகமாகி உள்ளது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய, சில விலக்குகளுடன் கோதுமை ஏற்றுமதியைத் தற்காலிகமாகத் தடை செய்வதாக இந்தியா கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

அதுபோன்ற நடவடிக்கைகள் நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்று ஜிஏழு நாடுகளின் அமைச்சர்கள் விமர்சித்தனர்.

இந்தியாவின் அந்த முடிவால் உலமெங்கும் உணவு விலைகள் மேலும் உயரும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்தியா கோதுமை உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடு என்றாலும் அதன் அவ்வளவு அதிகமான கோதுமையை ஏற்றுமதி செய்வதில்லை.

ஆனால் உலகில் தேவைப்படும் கோதுமையில் மூன்று ஒரு பங்கை உற்பத்தி செய்யும் உக்ரேனும் ர‌ஷ்யாவும் போர் புரிந்து வருவதால், அங்கு கோதுமை ஏற்றுமதி முடங்கிவிட்டது. ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வறட்சியால் விளைச்சல் இல்லை.

அதனால் ஏற்பட்ட பற்றாக்குறையைப் பயன்படுத்திக் கொள்ள இந்திய அரசாங்கம் நினைத்தது.

-

கோதுமையை ஏற்றுமதி செய்ய மற்ற நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.

ஆனால் உள்நாட்டுச் சந்தையில் கோதுமை விலைகள் பெருமளவு அதிகரித்ததை அடுத்து, இந்தியா அதன் திட்டத்தை மாற்றிக் கொண்டது.

இதைத் தொடர்ந்து சிக்காகோ வர்த்தகக் கழகத்தில் இன்று கோதுமை வாங்குவதற்கான ஒப்பந்த விலை 25 கிலோவுக்கு 12.47 அமெரிக்க டாலர் அதிகரித்தது.

சிக்காகோ வர்த்தகக் கழகத்தின் தானிய விலைகள் உலகச் சந்தையில் அளவுகோலாகக் கருதப்படுகின்றன.

அதில் கோதுமை விலைகள் இந்த ஆண்டு இதுவரை மட்டும் விலைகள் 60 விழுக்காடு உயர்ந்துள்ளன.