இந்தியாவின் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி, தம்முடைய வீட்டின் படுக்கையறையில் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) மாண்டுகிடக்கக் காணப்பட்டார். அவருடைய சடலத்தை மீட்ட காவல்துறையினர், அதைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சௌந்தர்யா நீரஜ் எனும் அவர், உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
30 வயதான சௌந்தர்யா, பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார். மத்திய பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தம்முடைய கணவருடன் அவர் வசித்து வந்தார். 2019ல் திருமணமான அத்தம்பதிக்கு ஆறுமாத கைக்குழந்தை உள்ளது.
-
எடியூராப்பாவின் பேத்தி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

