கோல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு

1 mins read
2ad97349-4e63-4f1f-8f30-5dcce83b1620
கோல்கத்தா ஆா்ஜிகா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவா் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் ஜனவரி 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

கோல்கத்தா: கோல்கத்தா ஆா்ஜிகா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக்கோரி மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

மேலும், மேற்கு வங்க அரசுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை இல்லை எனத் தெரிவித்த நீதிமன்றம் மாநில அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இச்சம்பவத்தில் காவல்துறையுடன் இணைந்து தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராயைக் குற்றவாளி என அறிவித்த சியால்டா நீதிமன்றம் அவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனக்கூறி இந்த வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத் துறையும் மேற்கு வங்க அரசும் சியால்டா நீதிமன்ற உத்தரவை எதிா்த்து கோல்கத்தா உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இந்த மனுக்களை மோல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி தேபாங்சு பசாக் தலைமையிலான அமா்வு விசாரித்தது.

விசாரணையின்போது, “இந்த வழக்கு தொடா்பாக சியால்டா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தபோது மாநில அரசு அதில் பங்கேற்கவில்லை. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பு திடீரென குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக்கோரி மாநில அரசு மனுதாக்கல் செய்வதை அனுமதிக்க முடியாது. மாநில அரசுக்கு இந்த விவகாரத்தில் எவ்வித அங்கீகாரமும் இல்லை,” என்று சிபிஐ தரப்பு கூறியது.

குறிப்புச் சொற்கள்