தமிழ்ப் பெண்ணை மணக்கவுள்ள ஆஸி. கிரிக்கெட் விளையாட்டாளர்; கவனத்தை ஈர்த்துள்ள அழைப்பிதழ்

தமிழ்ப் பெண்ணை மணக்கவுள்ள ஆஸி. கிரிக்கெட் விளையாட்டாளர்; கவனத்தை ஈர்த்துள்ள அழைப்பிதழ்

1 mins read

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விளையாட்டாளர் கிளென் மேக்ஸ்வெல் தாம் காதலித்து வரும் தமிழ்ப் பெண் வினி ராமனைத் திருமணம் செய்யவுள்ளார்.

தமிழில் பாரம்பரிய முறைப்படி அச்சடிக்கப்பட்ட அவர்களது திருமண அழைப்பிதழ் இப்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் கிளென் மேக்ஸ்வெல்.

சென்னையில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த வினி ராமனை மருந்தியல் துறையில் படித்தவர்.

மேக்ஸ்வெல் அவரைக் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.

இருவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய பராம்பரியப்படி நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் கொவிட்-19 பெருந்தொற்று, முடக்கநிலையால் திருமணம் தள்ளிப் போனது.

இப்போது மேக்ஸ்வெல், வினி இருவருக்கும் திருமண தேதி முடிவு செய்யப்பட்டு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.

-

மார்ச் 27ஆம் தேதி திருமணம். பழைமை மாறாது எளிமையான அவர்களது திருமண அழைப்பிதழ் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது.