பெங்களூரு: சாய்ந்த கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது (காணொளி)

பெங்களூரு: சாய்ந்த கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது (காணொளி)

1 mins read
Google News Preferred Icon

இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் சாய்ந்த நிலையில் இருந்த கட்டடம் ஒன்றை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

மேற்கு பெங்களூரின் கமலா நகரில் உள்ள அந்த நான்கு மாடிக் கட்டடத்தில் இருந்த குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

கட்டடம் இடிக்கப்படுவதை முன்னிட்டு, தீயணைப்பாளர்களும் போலிசாரும் அந்தப் பகுதியில் பணியமர்த்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட அந்தக் கட்டடத்தில் இருந்த அனைவரும் சுற்றியுள்ள கட்டடங்களில் இருப்பவர்களும் வேறொரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

பெங்களூரில் அண்மையில் பெய்த கனமழையும் அந்தக் கட்டடத்தின் அடித்தளம் வலுவாக இல்லாததும் அது சாய்ந்ததற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டன.

Watch on YouTube