இந்தியாவில் அண்மையில் திருமணம் செய்துகொண்டு ஒரு தம்பதி தங்களுக்கிடையே ஒரு வினோத கல்யாண ஒப்பந்தத்தை போட்டுகொண்டனர். இதில் இருவர் பின்பற்றவேண்டியது, செய்யக்கூடாதது என்று ஒரு பட்டியலை வரைந்துள்ளனர். பெண்ணும் மாப்பிள்ளையும் ஒப்பந்தத்தை கையெழுத்திடும் காணொளி 45 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. அசாமைச் சேர்ந்த 24 வயதான சாந்தி பிரசாத் தமது காதலனான மிண்ட்டு ராய்யை, 25 அண்மையில் மணந்தார். இவர்களுக்கு ஒரு வித்தியாசமான திருமண அன்பளிப்பை வழங்க அவர்களது நண்பர்கள் எண்ணினர். இருவரும் செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்று ஒரு பட்டியலை போட்டனர்.
-
-

