மின்சாரப் பேருந்துகளுக்கு ரூ. 1.5 கோடியில் மின்னூட்ட நிலையம்

1 mins read
df48b2a7-9654-4637-a31e-6e54c3e153a2
சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு மின்சாரப் பேருந்து சேவை தற்போது இயக்கத்தில் உள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், அவற்றுக்குத் தேவையான மின்னூட்ட நிலையங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தாவரவியல் பூங்கா எதிரே உள்ள இடத்தில் புதுச்சேரி மின் துறை 1.5 கோடி ரூபாய் திட்டத்தில் மின்னூட்ட நிலையத்தை அமைக்கவுள்ளது.

“புதுச்சேரி நகரப் பகுதியில் பொதுப்போக்குவரத்தினை அதிகரிக்கும் வகையில் 25 மின்சாரப் பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இதற்கான கொள்முதல் ஒப்பந்தம் ஓரிரு தினங்களில் வழங்கப்படும். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரப் பேருந்துகள் அனைத்தும் முழுமையாக இயக்கப்படும்,” என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்