அகமதாபாத்: ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்தவர்களின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் ஏற்பதாகவும் அவர்களுக்குத் தேவையான உதவியை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சேதம் அடைந்த பி.ஜே. மருத்துவ விடுதிக்கும் முழு உதவி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் பயணம் செய்த பயணிகளைத் தவிர, குடியிருப்பு மற்றும் விடுதியில் இருந்தவர்களும் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்