மங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

மங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

1 mins read
f2ffa122-30ac-4582-8a62-8bc4ef84030d
இந்த வழக்கு பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளியான முகமது ஷரீக் மீது 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

பெங்களூரு: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மங்​களூருவில் நடைபெற்ற குண்​டு​வெடிப்பு தொடர்பான வழக்​கில் முக்​கியக் குற்றவாளி​க்கு பத்தாண்டு சிறைத் தண்​டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளியான முகமது ஷரீக் மீது 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு, கர்​நாடக மாநிலம் மங்​களூரு​வில் முகமது ஷரீக் ஆட்​டோ​வில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் கொண்டுசென்ற குக்கர் குண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில் முகமது ஷரீக் (24 வயது), ஆட்டோ ஓட்​டுநர் புருஷோத்​தம் பூஜாரி (37) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்​தார்.

உடல் முழுவதும் தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முகமது ஷரீக். இந்த வழக்கில் தேசியப் புலனாய்வு முகவை விசாரணை மேற்கொண்டது.

முகமது ஷரீக்குக்கு பயங்கரவாதத் தொடர்புகள் இருப்பதாகச் சந்தேகித்த அதிகாரிகள் அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்த என்ஐஏ அதிகாரிகள், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், முகமது ஷரீக் மீது 1,200 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் இந்த வழக்கின் விசாரணை நீடித்தது.

இந்நிலையில், கூட்டுச்சதி, சேதம் விளை​வித்​தல், தேசியப் பாது​காப்புச் சட்​டத்​தின்​கீழ் குற்​றம் இழைத்ததற்காக பத்து ஆண்டு சிறைத்தண்​டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்​தர​விட்​டது. இதையடுத்து அவர் பெங்​களூரு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்​.

குறிப்புச் சொற்கள்