தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறார்களும் வங்கிக் கணக்கைக் கையாளலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு

1 mins read
f291c9e5-324d-424e-836b-f2cdffed749a
சிறார்களின் வங்கிக் கணக்குகளுக்கு சிறார்களின் பெற்றோர் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் இனி, பத்து வயதுக்கும் மேற்பட்ட சிறார்களும் வங்கிக் கணக்கைக் கையாளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கிக் கணக்குகளுக்கு சிறார்களின் பெற்றோர் பாதுகாவலர்களாக (கண்காணிப்பு) நியமிக்கப்பட வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

“சிறார்கள் சுயமாக வங்கிக் கணக்கைக் கையாளலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் சுயமாக சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். தங்கள் பெயரில் வைப்புத்தொகைகளும் செலுத்தலாம்,” என ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறார் கணக்குக்கும் இனி பற்று அட்டை (டெபிட் கார்ட்), காசோலைகள் வழங்கப்படும் என்றும் இணையம் வழிக் கணக்கைக் கையாளும் வசதியையும் அவர்கள் பயன்படுத்த முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது.

எனினும், இது தொடர்பான இறுதி முடிவை சம்பந்தப்பட்ட வங்கிகள்தான் எடுக்கும்.

சிறார்களின் வங்கிக் கணக்குகள் அவர்களால் கையாளப்படுகிறதா அல்லது அவர்களின் பாதுகாவலர்களால் கையாளப்படுகிறதா என்பதை வங்கி நிர்வாகங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறார்கள், உரிய வயதை எட்டிய பிறகு, வழக்கமான வங்கி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்தப் புதிய விதிகளை அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்