இந்தியா, பாகிஸ்தானில் புயல் அச்சம்; 100,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

இந்தியா, பாகிஸ்தானில் புயல் அச்சம்; 100,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

14 Jun 2023 - 8:12 pm

1 mins read

'பிப்பர்ஜாய்' புயல் காரணமாக இந்தியா, பாகிஸ்தானில் 100,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புயல் கடுமையாக இருக்கும் என்றும் அதனால் வீடுகள் மின் கம்பங்கள் முதலியவை பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் குஜராத், பாகிஸ்தானின் கராச்சி பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

சூறாவளியின் போது அரேபிய கடலில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குஜராத் கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

அம்மாநிலத்தில் இதுவரை 48,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புதன்கிழமை மாலை முதல் மேலும் பல்லாயிரகணக்கானோர் வேறு இடங்களுக்குச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 75 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்