தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சோதனையில் சிக்கிய ரூ.11.64 கோடி;8 மணி நேரம் எண்ணிய அதிகாரிகள்

1 mins read
05f7e671-d0ba-407d-af4d-b499d04c6163
நான்கு இயந்திரங்களைப் பயன்படுத்தி எட்டு மணி நேரம் இடைவிடாமல் அதிகாரிகள் பணத்தை எண்ணும் பணியை மேற்கொண்டனர். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகாரில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட ரூ.11.64 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றை நான்கு இயந்திரங்களைப் பயன்படுத்தி 8 மணி நேரம் இடைவிடாமல் அதிகாரிகள் எண்ணும் பணியை மேற்கொண்டனர்.

பீகார் மாநிலத்தில் கட்டட கட்டுமானத் துறையின் தலைமைப் பொறியாளராகப் பதவி வகிப்பவர் தாரிணி தாஸ். அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத கிட்டத்தட்ட ரூ.11.64 கோடி பணம் சிக்கியது.

தாரிணி தாஸ் அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். மூத்த அதிகாரி ஒருவருக்குத் தொடர்புடைய பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அச்சோதனை நடத்தப்பட்டது.

சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவல் அடிப்படையில் தாரிணி தாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரின் வீட்டின் பல அறைகளிலும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பணத்தைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பறிமுதல் செய்த பணத்தை நான்கு இயந்திரங்களைப் பயன்படுத்தி எட்டு மணி நேரம் இடைவிடாமல் எண்ணும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்