நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்; இந்தியர்கள் 11 பேர் மீட்பு (காணொளி)

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்; இந்தியர்கள் 11 பேர் மீட்பு (காணொளி)

1 mins read
25008180-3b67-4b0e-9011-e7c7e2395bc2
ஓமான் கடற்பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த கப்பல். - படம்: ஓமான் காவல்துறை / எக்ஸ்

மஸ்கட்: ஓமான் கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த கப்பலிலிருந்து 11 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அக்கப்பலின் ஊழியர்கள்.

இச்சம்பவம் சனிக்கிழமை (டிசம்பர் 23) நிகழ்ந்தது.

அவர்களில் ஒருவர் மட்டும் இலேசான காயமடைந்ததாகவும் மற்ற அனைவரும் காயமின்றித் தப்பியதாகவும் ஓமான் காவல்துறை தனது ‘எக்ஸ்’ பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளது.

அந்தக் கப்பல் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, சோமாலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கப்பல் கொழுந்துவிட்டு எரியும் காணொளியை ஓமான் காவல்துறை பகிர்ந்துகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்