12 வயது சிறுமிக்கு மாரடைப்பு

12 வயது சிறுமிக்கு மாரடைப்பு

படம்: இந்திய ஊடகம்

16 Nov 2024 - 5:47 pm

1 mins read

திருப்பதி: தெலுங்கானாவின் மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவருக்கு 12 வயதில் கஸ்தூரி நிவ்ருதி என்ற மகள் இருந்தார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்த அவர், நவம்பர் 15ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்குப் புறப்பட்டுள்ளார்.

குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டிருந்த அச்சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அச்சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அச்சிறுமியின் பெற்றோர் அலறித் துடித்தனர்.

12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தது அவ்வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மாரடைப்புசிறுமிஉயிரிழப்பு