புதுடெல்லி: யமுனை நதியில் குப்பை அகற்றும் பணி நடந்து வரும் நிலையில், டெல்லி அமைச்சர் பர்வேஷ் வர்மா படகில் சென்று குப்பை அகற்றும் பணியை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யமுனை நதியில் இருந்து 10 நாள்களில் 1.3 மில்லியன் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“டெல்லி மாநகர் முழுவதும் அனைத்து வடிகால்களும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் யமுனை நதியில் கலப்பதைத் தடுக்க அவற்றின் திறன் அதிகரிக்கப்படும்.
“கடந்த 10 நாட்களில் யமுனையில் இருந்து 1.3 மில்லியன் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் பர்வேஷ் வர்மா மேலும் தெரிவித்தார்.
சட்டபேரவைத் தேர்தலில் யமுனை நதியை சுத்தம் செய்வதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.