ரூ.14.69 கோடி கொக்கைன் போதைப்பொருள் சிக்கியது; இரு பெண்கள் கைது

2 mins read
db556454-d800-4cc2-be67-779fbf81cd39
பெண்கள் வைத்திருந்த 40 சோப்புகளுக்குள் கொக்கைன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்த முயற்சி நடந்துள்ளது. - படம்: தமிழக ஊடகம்

பெங்களூரு: பெங்​களூரு அனைத்துலக விமான நிலை​யத்​தில் போதைப்பொருள் கடத்​தல் நடப்பதாக வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​களுக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் பெங்​களூரு மண்டல அதி​காரி​கள் விரைந்து சென்று விமான நிலை​யத்​தில் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது கவுகாத்தியில் இருந்து பெங்​களூரு விமானத்​தில் வந்த இரு இளம்​பெண்​கள் மீது சந்​தேகம் ஏற்​பட்​டது. அவர்​களின் உடைமை​களை அதி​காரி​கள் பரிசோ​தித்​தனர்.

அவர்​களின் பெட்​டி​யில் வழக்​கத்​துக்கு மாறாக 40க்​கும் மேற்​பட்ட சோப்​பு​கள் இருந்தன. அவற்​றின் உறையைப் பிரித்துச் சோதித்தபோது, வெள்ளை நிறப் பொடி இருந்தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. பரிசோதித்துப் பார்த்ததில் கொக்கைன் போதைப் பொருள் என்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

ஒட்​டுமொத்​த​மாக 7.5 கிலோ கொக்கைன் போதைப்பொருள் அந்த இரு பெண்களின் உடைமைகளில் சிக்கியது.

அந்தப் பெண்களைக் கைது செய்த அதிகாரிகள், கொக்கைன் போதைப்பொருளை உடனடி​யாகப் பறி​முதல் செய்​தனர்.

பிடிபட்ட போதைப்பொருளின் அனைத்துலகச் சந்தை மதிப்பு சுமார் ரூ.14.69 கோடி என அதிகாரி​கள் கூறினர்.

கைது செய்​யப்​பட்​ட​ 24 வயதுப் பெண் மணிப்​பூரைச் சேர்ந்​தவர் எனவும் 26 வயதான பெண் மிசோரமைச் சேர்ந்​தவர் எனவும் தெரிய​வந்​துள்​ளது.

இரு​வர் மீதும் வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் போதைப்பொருள் தடுப்புச் சட்​டத்​தின்கீழ் வழக்குப் பதிவு செய்​தனர். மருத்​துவப் பரிசோதனைக்குப் பின்​னர், பெங்​களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் முன்னிலைப்​படுத்​தினர்.

அவர்களை ஐந்து நாள்கள் காவலில் எடுத்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​. ஏறத்தாழ 15 கோடி ரூபாய் அளவுக்குப் போதைப்பொருளைக் கடத்தி வந்தவர்களின் பின்னணியில் உள்ளது யார் என்பது விசாரணைக்குப் பின் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்