கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி

கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி

1 mins read
813139e3-d778-420b-a150-1f93b59ce931
மது விற்க தடையுள்ள மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்தனர். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

சரண்: பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்தது கண்டு அவ்வட்டார மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பீகாரில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மதுவை விற்கவும் குடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்தவர்கள், உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். முதலில் பலி எண்ணிக்கை 6ஆக இருந்த நிலையில், தற்போது 20ஐ எட்டியுள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சிவான் மாவட்ட மாஜிஸ்திரேட் முகுல் குமார் குப்தா, “தகவல் அறிந்தவுடன் மேஹார், அவ்ரியா பஞ்சாயத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்