காருக்கு அடியில் மறைந்திருந்த 15 அடி ராஜநாகம்; சிறப்பாக பிடித்த ஆடவர் (காணொளி)

1 mins read
19242f9e-4bc0-4a1f-b83d-746a316777e7
படம்: டுவிட்டர் -

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இந்தியாவில் ஓர் ஆடவர் தைரியமாக 15 அடி நீள ராஜநாகத்தை சிறப்பாக பிடித்துள்ளார்.

இந்திய வனத்துறையின் உயர் அதிகாரியான சுசாந்தா நந்தா தமது டுவிட்டர் பக்கத்தில் அந்த காணொளியைப் பதிவிட்டுள்ளார்.

காணொளியில் பாம்பைப் பிடிக்கும் பயிற்சி பெற்ற ஆடவர் ஒருவர் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் நிதானமாக பாம்பை ஒரு பைக்குள் அடைத்தார்.

கிட்டத்தட்ட 15அடி நீளம் கொண்ட அந்த பாம்பு பின்னர் காட்டில் விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மழைக் காலங்களில் வெப்பமான இடம்தேடி பாம்புகள் இதுபோன்ற சில இடங்களில் மறைந்திருக்கும் என்று நந்தா குறிப்பிட்டார்.

சம்பவம் எந்த இடத்தில் எப்போது நடந்தது என்பது பற்றிய தகவல்களை அவர் குறிப்பிடவில்லை.

பிடிபட்ட பாம்பின் ஒரு கடி வி‌ஷம் 20 மனிதர்களைக் கொல்லக்கூடிய தன்மை கொண்டது.

குறிப்புச் சொற்கள்