தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா: மார்பக அளவைக் குறைக்கும் சிகிச்சையை செய்துகொண்ட 15,000 பெண்கள்

1 mins read
1b6bc860-983b-47a0-8bb0-947df7034cde
அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மும்பையில் மார்ச் 8ஆம் தேதி ரயிலில் பயணம் செய்யும் மகளிருக்கு யோகா வகுப்பை நடத்தும் பயிற்றுவிப்பாளர் (நடுவில்). படம்: ஏஎஃப்பி -

பொதுவாக, மார்பக அளவைப் பெரிதாக்குவற்கான சிகிச்சை முறை பக்கம் பெண்களின் கவனம் திரும்புவது வழக்கம். ஆனால், இந்தியாவில் பெண்கள் பலர் தங்களது கனமான மார்பகங்களின் அளவைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சதைப்பற்றுள்ள, சுரப்பிகள் அடங்கிய திசுக்களை அகற்றுவதற்கான சிகிச்சை முறையை 2021ல் இந்தியா முழுவதும் ஏறக்குறைய 15,000 பெண்கள் நாடினர்.

ஒப்புநோக்க, மார்பக அளவைப் பெரிதாக்க அதே ஆண்டில் 31,608 பெண்கள் சிகிச்சை செய்துகொண்டனர்.

இந்தியாவில் நிலவும் போக்கு, உலகளாவிய போக்குடன் சற்று மாறுபட்டது. 'இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் எஸ்தேத்திக் பிளாஸ்டிக் சர்ஜரி' எனும் அமைப்பின்படி, 1.62 மில்லியன் மகளிர் மார்பக அளவை அதிகரிப்பதற்கான சிகிச்சையை செய்துகொண்டனர். ஒப்புநோக்க, 0.43 மில்லியன் மகளிர் மார்பக அளவைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டனர்.