16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

1 mins read
9e116420-1a5b-4ea4-9562-8a3a3f0dbc9c
சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராட்டம். - படம்: ஊடகம்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் பழங்குடியினச் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கல்லால் அடித்துக் கொன்று காட்டில் வீசிய கும்பலுக்கு மரண தண்டனை விதித்து கோர்பா மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

16 வயது சிறுமியை 2வது திருமணம் செய்ய முயன்ற கதுபிரோதா கிராமத்தைச் சேர்ந்த சந்த்ராம் மஜ்வார், அச்சிறுமி மறுத்ததால் அப்துல் ஜாபர், அனில் குமார், பர்தேஷ் ராம், ஆனந்த் ராம் பனிகாவுடன் சேர்ந்து 2021ல் இந்தக் கொடூர சம்பவத்தை அரங்கேற்றினார்.

சிறுமியுடன் இருந்த அவரது தாத்தா மற்றும் நான்கு வயது பேத்தியையும் அக்கும்பல் கொன்றது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐந்து பேருக்கும் மரண தண்டனையையும், மற்றொரு நபருக்கு ஆயுள் தண்டனையையும் விதித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்