ரயில் மோதி 17 பசுக்கள் உயிரிழப்பு

1 mins read
7dbff73d-cdb2-42e7-b808-42007d08bc0f
மாண்ட 17 பசுக்களில் ஒரு கன்றுக்குட்டியும் அடங்கும். - கோப்புப் படம்: ஊடகம்

பாலக்காடு: அதிவேகமாகச் சென்ற ரயில் மோதியதில் 17 பசுக்கள் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்து உள்ளது.

சனிக்கிழமை அதிகாலை வேளையில் பாலக்காடு மீன்கரா அணை அருகே பசு மாடுகள் கூட்டமாக ரயில் தண்டவாளத்தைக் கடந்துகொண்டு இருந்தன.

அப்போது சென்னை-பாலக்காடு விரைவு ரயில் ஒன்று வந்துகொண்டு இருந்தது.

பசுமாட்டுக் கூட்டத்தைக் கண்ட ரயில் ஓட்டுநர் எச்சரிக்கை ஒலியை மீண்டும் மீண்டும் எழுப்பினார். இயன்றவரை ரயிலை நிறுத்த வேக விசையைப் பாதுகாப்பான முறையில் இயக்கினார்.

இருந்தபோதிலும், வேகமாகச் சென்ற ரயில் 17 பசுமாடுகள் மீது மோதியது. பசுக்களின் உடல்கள் அந்தப் பகுதி முழுவதும் சிதறின.

மாண்ட 17 பசுக்களில் ஒரு கன்றுக்குட்டியும் அடங்கும். ரயிலில் அடிபட்ட சில பசுக்கள் தண்டவாளத்தில் உடல் நசுங்கிக் கிடந்தன.

அருகிலுள்ள பள்ளத்தில் சில பசுக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பசுக்களின் உடல்களை அகற்றி ரயில் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

பசுக்களை அடக்கம் செய்வது குறித்து பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். தமது பசுக்கள் உயிரிழந்ததைக் கண்டு, அவற்றின் உரிமையாளர்களில் ஒருவர் மயக்கம் அடைந்ததாக கேரள ஊடகங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்