இந்தியாவில் 17 ஆண்டுகளில் 1,765 யானைகள் உயிரிழப்பு

இந்தியாவில் 17 ஆண்டுகளில் 1,765 யானைகள் உயிரிழப்பு

படம்: பிக்சாபே

18 Nov 2026 - 6:01 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 17 ஆண்​டு​களில் 1,765 யானைகள் உயி​ரிழந்​தன.

தகவல் அறி​யும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேட்​கப்​பட்ட கேள்விக்கு மத்​திய சுற்​றுச்​சூழல் அமைச்​சு பதில் அளித்துள்ளது.

கடந்த 2009 முதல் 2026 வரை 1,765 யானை​கள் உயி​ரிழந்​தன. அதில் மின்​சா​ரம் தாக்கி மட்டும் 1,185 யானைகள் மாண்டன.

இதைத் தவிர, ரயில் மோதி 277, வேட்​டை​யாடப்​பட்டு 222, விஷம் வைத்​த​தால் 81 யானை​கள் மாண்டன.

நாட்​டிலேயே அதிகபட்​ச​மாக ஒடி​சா​வில் 371 யானை​கள் உயி​ரிழந்​தன. அடுத்து அசாமில் 356, கர்​நாட​கா​வில் 223 யானை​களும் உயி​ரிழந்​தன.

ரயில் மோதி அசாமில் 90, மேற்கு வங்​கத்தில் 68, ஒடி​சா​வில் 45 யானை​கள் கொல்லப்பட்டன.

“மின்​சா​ரம் தாக்கி யானை​கள் உயி​ரிழப்​பது விபத்து அல்ல; அலட்​சி​யம். யானை வழித்​தடங்​களில் சட்​ட​விரோத​மாக அமைக்​கப்​படும் மின்வேலிகள், தாழ்​வாகத் தொங்​கும் மின்​கம்​பிகளே இதற்​குக் காரணம். இதைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்,” என்​று ‘ஆர்​டிஐ’ மனுத் தாக்​கல் செய்த சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் அமித் குப்தா கூறினார்.

குறிப்புச் சொற்கள்