புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளில் 1,765 யானைகள் உயிரிழந்தன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு பதில் அளித்துள்ளது.
கடந்த 2009 முதல் 2026 வரை 1,765 யானைகள் உயிரிழந்தன. அதில் மின்சாரம் தாக்கி மட்டும் 1,185 யானைகள் மாண்டன.
இதைத் தவிர, ரயில் மோதி 277, வேட்டையாடப்பட்டு 222, விஷம் வைத்ததால் 81 யானைகள் மாண்டன.
நாட்டிலேயே அதிகபட்சமாக ஒடிசாவில் 371 யானைகள் உயிரிழந்தன. அடுத்து அசாமில் 356, கர்நாடகாவில் 223 யானைகளும் உயிரிழந்தன.
ரயில் மோதி அசாமில் 90, மேற்கு வங்கத்தில் 68, ஒடிசாவில் 45 யானைகள் கொல்லப்பட்டன.
“மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது விபத்து அல்ல; அலட்சியம். யானை வழித்தடங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வேலிகள், தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகளே இதற்குக் காரணம். இதைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ‘ஆர்டிஐ’ மனுத் தாக்கல் செய்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அமித் குப்தா கூறினார்.
