சட்டவிரோதமாக குடியேறிய 18 பங்ளாதேஷியர் நாடு கடத்தல்

1 mins read
aca6efc4-da92-49a3-ac48-7c6c3e247fa5
புதுடெல்லி காவல்துறை உயர் அதிகாரி ஹர்ஷவர்தன். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 பங்ளாதேஷியர் சனிக்கிழமை (பிப்ரவரி1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும் மூன்று பங்ளாதேஷியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை உயர் அதிகாரி எம்.ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக இந்தியாவினுள் குடியேறிய பங்ளாதேஷியரைப் பிடிக்க டெல்லி காவல் துறையினர் மேற்கொண்ட சிறப்புச் சோதனையில் 21 பங்ளாதேஷியர் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, திரு ஹர்ஷவர்தன், “21 பங்ளாதேஷியரில் 18 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறுவன் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் பாஹர்கஞ்சு காவல்துறையில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களிடம் இருந்து இந்தியக் கடவுச்சீட்டு, இந்திய ஆவணங்கள் மற்றும் பங்ளாதேஷின் கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அதில் இருவர், 20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவினுள் சட்டவிரோதமாகக் குடியேறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களுக்குப் போலி ஆவணங்கள் மூலம் இந்தியக் கடவுச்சீட்டு பெறுவதற்கு உதவி செய்த தரகரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்