சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.
அரசு காவல்துறையில் அவ்வப்போது முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்தவகையில் இன்று (11.06.2025) தமிழ்நாடு முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை ஆணையராகவும், குளச்சல் ஏஎஸ்பி கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை ஆணையராகவும், நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.