உத்தரப் பிரதேசத்தில் 18.8 லட்சம் வாக்காளர்கள் புதிதாகச் சேர்ப்பு

உத்தரப் பிரதேசத்தில் 18.8 லட்சம் வாக்காளர்கள் புதிதாகச் சேர்ப்பு

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

18 Nov 2026 - 5:46 pm

1 mins read

லக்னோ: அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிட்டத்தட்ட 18.8 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிதாக சேர்க்கப்பட்டவர்களில், ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட எஸ்ஐஆரில் விடுபட்டவர்களும் அடங்குவர்.

எஸ்எஸ்ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் அந்த மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நவதீப் ரின்வா செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) லக்னோவில் வெளியிட்டார்.

அதன்பிறகு நடை​பெற்ற செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் பேசிய அவர், “எஸ்​எஸ்​ஆர் 2027ன் கீழ் உள்ள வரைவு வாக்​காளர் பட்டியலில் 13 கோடியே 58 லட்​சம் வாக்காளர்கள் உள்​ளனர்.

“இவ்வாண்டுத் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்​ஐஆர் நடவடிக்கை​க்குப் பிறகு ஏப்​ரல் 10ஆம் தேதி இறுதியில் வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​ட​திலிருந்​து, இந்த வரைவுப்பட்​டியலில் கிட்​டத்​தட்ட 11 லட்​சம் பெண்​கள் உட்பட 18.8 லட்​சம் வாக்காளர்​கள் கூடு​தலாகச் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்,” என்றார்.

வாக்காளர் வரைவுப் பட்டியல் தொடர்பான ஆட்​சேபங்​களுக்​கான காலக்​கெடு நவம்​பர் 17 முதல் டிசம்​பர் 16 வரை திறந்திருக்​கும்.

இந்​தக் கால​கட்​டத்​தில், தகு​தி​யுள்ள குடிமக்​கள் வாக்​காளர் பட்டியலில் உள்ள பதிவு​களைச் சேர்க்க, நீக்க அல்​லது திருத்துவதற்கு விண்ணப்​பிக்​கலாம் என்றும் நவதீப் ரின்வா கூறினார்.

தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் சமயம் அல்லது சாதி குறித்த தரவுகளைப் பராமரிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்