கட்டுமானத் தளத்தின் 42வது மாடியிலிருந்து பாறை விழுந்ததில் இருவர் மரணம்

கட்டுமானத் தளத்தின் 42வது மாடியிலிருந்து பாறை விழுந்ததில் இருவர் மரணம்

1 mins read
488b956d-9db1-4cfc-9862-b37fb26026b1
படம்: இந்திய ஊடகம் -

மும்பையில் கட்டப்பட்டுவரும் கட்டடம் ஒன்றின் 42வது மாடியிலிருந்து பாறை ஒன்று கீழே விழுந்ததில் இருவர் மாண்டனர்.

நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அருகே இரவு நேரத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது திடீரென பாறை ஒன்று கட்டடத்தின் 42வது மாடியிலிருந்து விழுந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறினர்.

இதில் காயமடைந்த இரு கட்டுமான ஊழியர்கள் பின்னர் உயிரிழந்தனர். ஹோட்டலுக்கு அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன.